- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 2வது ஓடிஐ: சிஎஸ்கே கேப்டன் நீக்கம்! அதிரடி மன்னன் கம்பேக்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 2வது ஓடிஐ: சிஎஸ்கே கேப்டன் நீக்கம்! அதிரடி மன்னன் கம்பேக்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 2nd ODI: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள்? பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய அணி போராடி வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 349 ரன்கள் குவித்தது. கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி அதிரடி சதம் (120 பந்துகளில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 135 ரன்கள்) விளாசினார். ரோகித் சர்மா (57), கேப்டன் கே.எல்.ராகுல் (60) அரை சதம் விளாசினார்கள்.
2வது ஓடிஐ போட்டியில் ஒரு மாற்றம்
பின்பு ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 332 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி போராடி தோல்வி அடைந்தது. மேத்யூ பிரீட்ஸ்க்கே (72), மார்கோ யான்சன் (70), கார்பின் போஷ் (67) அரை சதம் அடித்து போராடினார்கள்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போடி ராய்ப்பூரில் வரும் 3ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ருத்ராஜ் கெய்க்வாட் நீக்கம்; ரிஷப் பண்ட் உள்ளே
அதாவது முதல் ஓடிஐயில் கிடைத்த ஒரே வாய்ப்பில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பினார். இதனால் 2வது ஓடிஐயில் அவர் நீக்கப்பட்டு அதிரடி மன்னன் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளது.
மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றங்களும் இருக்காது. ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். விராட் கோலி ஒன்டவுனிலும், கே.எல்.ராகுல் அதற்கு அடுத்த இடத்திலும் களம் காண்பார்கள்.
மிடில் வரிசையில் பண்ட், ஜடேஜா
மிடில் வரிசையில் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட்டும், பின்வரிசையில் ஜடேஜாவும் பேட்டிங் செய்ய உள்ளனர். ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இருப்பார்கள். பாஸ்ட் பவுலிங்கில் முதல் ஓடிஐயில் சிறப்பாக பந்துவீசிய ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா அங்கம் வகிப்பார்கள்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (கேப்டன்) ரோகித் சர்மா, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், ஆர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

