- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS 1st T20: இந்தியா முதலில் பேட்டிங்! ஹர்சித் ராணா உள்ளே! மெயின் பவுலர் வெளியே! பிளேயிங் லெவன்!
IND vs AUS 1st T20: இந்தியா முதலில் பேட்டிங்! ஹர்சித் ராணா உள்ளே! மெயின் பவுலர் வெளியே! பிளேயிங் லெவன்!
IND vs AUS 1st T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எதிர்பார்த்தபடி ஹர்சித் ராணா இடம் பெற்றார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டி20
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட நிலையில், ஜிதேஷ் சர்மா வெளியேற்றப்பட்டார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து வீச்சாளர்களாக அணிக்கு திரும்பினார்கள்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
அதே வேளையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆடுகளம் இரண்டாவது பாதியில் மெதுவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வரிசையில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி எப்படி?
பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவார். சஞ்சு சாம்சனைத் தவிர, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் பேட்டிங் வரிசையில் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணியில், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆல்-ரவுண்டராகவும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
மேத்யூ குனேமன் சிறப்பு சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். பேட்டிங் வரிசையில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இந்த தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் உள்ளன.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா ஆடும் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா ஆடும் லெவன்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குனேமன், ஜோஷ் ஹேசில்வுட்.