18 ரன்களில் உலக சாதனையை தவறவிட்ட இந்தியா – இன்று ஒரே நாளில் படைத்த சாதனைகள் என்னென்ன?
Team India missed the world record by 18 Runs in T20 Cricket: ஹைதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் குவித்து, சஞ்சு சாம்சன் சதம் அடித்து, சூர்யகுமார் யாதவ் 2500 ரன்கள் கடந்து பல சாதனைகள் படைத்தது.
Sanju Samson, India vs Bangladesh T20 Cricket
India missed the world record by 18 Runs in T20 Cricket: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிராக 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த 2ஆவது அணி என்ற சாதனையோடு இன்று ஒரே நாளில் பல சாதனைகளை சொந்தமாக்கி கொண்டுள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காணலாம்.
ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்று கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. ஆதலால், 3ஆவது போட்டி சும்மா பேருக்கு மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதெல்லாம் இல்லை என்பது போன்று பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
Sanju Samson, Indian CricketTeam, Team India
சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 4 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்தியா 23 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து பட்டாசு போன்று வெடித்தனர். ஹைதராபாத்தில் இருவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர்.
சஞ்சு சாம்சன் முதல் சதம், அதிவேக சதம்:
ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் பறக்க விட்ட சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அதிவேகமாக அரைசதம் அடித்தார். அதே போன்று அடுத்த 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்து 40 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.இது அவரது முதல் டி20 சதம் ஆகும். மேலும், அதிவேகமாக சதம் விளாசிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
India vs Bangladesh, T20 Cricket, Sanju Samson, Suryakumar Yadav
173 ரன்கள் பார்ட்னர்ஷிப்
கடைசியாக சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்சர் உள்பட 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு மற்றும் ஸ்கை இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டிற்கு 173 ரன்கள் குவித்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். அதன் பிறகு ஸ்கை கொஞ்ச நேரம் ஆட்டம் கட்ட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
சூர்யகுமார் யாதவ் 2500 ரன்கள்:
ஆனால் ஸ்கை 35 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 75 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இந்தப் போட்டியின் மூலமாக அதிவேமாக 2500 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக விராட் கோலி அதிவேகமாக 2500 ரன்கள் கடந்திருந்தார்.
India vs Bangladesh T20 Cricket,
அதிரடி காட்டிய பாண்டியா:
அதன் பிறகு ஹர்திக் பாண்டியா நானும் அடிப்பேன் என்று சொல்லி சரமாரியாக வெளுத்து வாங்கினார். 18 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரியான் பராக் தன் பங்கிற்கு 4 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
Team India Records, India vs Bangladesh T20 Cricket
இன்று ஒருநாள் மட்டுமே இந்தியா படைத்த சாதனைகள்:
டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த அணி – 6 ஓவர்களில் 82/1, ஹைதராபாத்.
டி20 கிரிக்கெட்டில் 26 பந்துகளில் 50 ரன்கள் கடந்து சாதனை
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்களை கடந்தது இந்தியா – 7.1 ஓவர்களில் 102/1 ரன்கள் எடுத்தது.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த ஜோடியாக சஞ்சு சாம்சன் – சூர்யகுமார் யாதவ் 173 ரன்கள் எடுத்து சாதனை.
10 ஓவர்களில் 152/1 ரன்களை கடந்த 3ஆவது அணி என்ற சாதனையை படைத்த இந்தியா.
14 ஓவர்களில் 201/2 ரன்களை கடந்த 2ஆவது அணி என்ற சாதனையை படைத்த இந்தியா
16.4 ஓவர்களில் இந்தியா 250 ரன்களை குவித்தது.
இறுதியாக 20 ஓவர்களில் 297/6 ரன்களை குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 2ஆவது அணி என்ற சாதனையை படைத்தது. எனினும் 18 ரன்களில் உலக சாதனையை இந்தியா தவறவிட்டது.
டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் 47 (சிக்ஸரும் + பவுண்டரி)
டி20 கிரிக்கெட்டில் இந்தியா இந்தப் போட்டியில் 22 சிக்ஸர்கள் அடித்துள்ளது.