MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • U19 WC IND vs AFG: ஆரோன் ஜார்ஜ் சதம், சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. ஆப்கானை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!

U19 WC IND vs AFG: ஆரோன் ஜார்ஜ் சதம், சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. ஆப்கானை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!

U19 World Cup: U19 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஆரோன் ஜார்ஜ் சூப்பர் சதம் விளாசினார்.

2 Min read
Author : Rayar r
| Updated : Feb 04 2026, 08:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
U19 ஓடிஐ உலகக்கோப்பை; பைனல் சென்ற இந்தியா
Image Credit : Getty

U19 ஓடிஐ உலகக்கோப்பை; பைனல் சென்ற இந்தியா

U19 ஓடிஐ உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கை இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 41.1 ஓவரில் சேஸ் செய்து மாஸ் காட்டியுள்ளது. 

இந்திய வீரர் ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 115 விளாசினார். ருத்ரதாண்டமாடிய வைபவ் சூர்யவன்ஷி 33 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்தார்.

23
ஆப்கானிஸ்தான் முதல் பேட்டிங்
Image Credit : Getty

ஆப்கானிஸ்தான் முதல் பேட்டிங்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் பைசல் ஷினோசாடா 93 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 110 ரன்களுடன் சூப்பர் சதம் விளாசினார். 

இதேபோல் சதம் அடித்த மற்றொரு வீரரான உசைருல்லா நியாசி 86 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் நாட் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Related Articles

Related image1
IND vs PAK: U19 உலகக்கோப்பை.. பாகிஸ்தானை பந்தாடிய இளம் சிங்கங்கள்.. இந்திய அணி 'மாஸ்' வெற்றி!
Related image2
U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே
33
ஆரோன் ஜார்ஜ் சூப்பர் சதம்
Image Credit : X/@cricinsights1

ஆரோன் ஜார்ஜ் சூப்பர் சதம்

பின்பு இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியும், ஆரோன் ஜார்ஜும் சூப்பரான தொடக்கம் அளித்தனர். ஆரோன் ஜார்ஜ் மெதுவாக விளையாட சூர்யவன்ஷி தனது வழக்கமான ஸ்டைலில் சிக்சர் மழை பொழிந்தார். 33 பந்தில் 4 சிக்சர்களுடன் 68 ரன்கள் அடித்து அவர் அவுட் ஆனார்.

பைனலில் இந்தியா, இங்கிலாந்து

பின்பு ஜோடி சேர்ந்த கேப்டன் ஆயுஷ் மாத்ரேவும் சிறப்பாக விளையாடி 59 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் பொறுப்பாக விளையாடி சூப்பர் சதம் (115 ரன்) விளாசிய கேரள வீரர் ஆரோன் ஜார்ஜ் அணி வெற்றியை நெருங்கிய சமயத்தில் அவுட் ஆனார். 

இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து பிரம்மாண்ட வெற்றி பெற்று பைனலுக்குள் சென்றுள்ளது. பிப்ரவரி 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாவும், இங்கிலாந்தும் பைனலில் மோதுகின்றன.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup 2026 : இந்த 5 வீரர்கள் தான் உலகக் கோப்பை முடிவை தீர்மானிப்பார்கள்
Recommended image2
T20 World Cup 2026: உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த அதிரடி பேட்ஸ்மேன்கள்
Recommended image3
டி20 உலகக்கோப்பை IND vs USA.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. சிக்சர் மன்னனுக்கு இடம்.. இந்தியா பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
IND vs PAK: U19 உலகக்கோப்பை.. பாகிஸ்தானை பந்தாடிய இளம் சிங்கங்கள்.. இந்திய அணி 'மாஸ்' வெற்றி!
Recommended image2
U19 உலகக்கோப்பையில் சதம் விளாசிய விஹான் மல்ஹோத்ரா.. திணறும் ஜிம்பாபே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved