- Home
- Sports
- Sports Cricket
- டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்; ஒரே நேரத்தில் டி20, ODI, டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்!
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்; ஒரே நேரத்தில் டி20, ODI, டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங்கில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதலில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்ட இந்த தொடர் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
இந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 அல்லது 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். ஏனென்றால், 3ஆவது இடத்தில் இலங்கையும், 4ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் உள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
இலங்கைக்கு நியூசிலாந்துடனும், தென் ஆப்பிரிக்காவிற்கு வெஸ்ட் இண்டீஸ் உடனும் டெஸ்ட் தொடர்கள் இருக்கிறது. இதில், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் சென்றுவிடும்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
ஆதலால், அது நடக்காமல் இருக்க இந்தியா அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி கனவு சாத்தியமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி ஜூன 11 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இந்தியா நம்பர் 1
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா 400 ரன்கள் எடுத்து, 223 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மீண்டும் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், அந்த அணி ரவிச்சந்திரன் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. இறுதியாக 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா நம்பர் 1
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 17 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. டெல்லியில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மைதானம் எப்படி இருக்கிறது என்று இன்று பார்வையிட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்தியா ஐசிசி தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் நம்பர் 1 அணியாகவும், ஒரு நாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாகவும் இந்தியா திகழ்கிறது. இப்படி அனைத்து போட்டிகளிலும் நம்பர் 1 அணியாக திகழும் சாதனையை தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா படைத்துள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1
இதுவரையில் இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,690 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 29 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா 3231 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து 3ஆவது இடத்திலும், நியூசிலாந்து 4ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 5ஆவது இடத்திலும் உள்ளன.