MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • T20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் சிக்சர் மழை.. பவுலிங்கில் கலக்கிய அபிஷேக் சர்மா.. SA-வை வீழ்த்திய இந்தியா!

T20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் சிக்சர் மழை.. பவுலிங்கில் கலக்கிய அபிஷேக் சர்மா.. SA-வை வீழ்த்திய இந்தியா!

T20 World Cup 2026: IND vs SA:சிக்சர் மழை பொழிந்த இஷான் கிஷன் வெறும் 20 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 04 2026, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்
Image Credit : Getty

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 240 ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த இஷான் கிஷன் வெறும் 20 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியே சென்றார். அபிஷேக் சர்மா 18 பந்தில் 24 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

23
திலக் வர்மா மாஸ் கம்பேக்
Image Credit : Tilak Varma\Twitter

திலக் வர்மா மாஸ் கம்பேக்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்த திலக் வர்மா 19 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் (16 பந்தில் 30 ரன்), அக்சர் படேல் (23 பந்தில் 35 ரன்), ஹர்திக் பாண்ட்யா 10 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன், கார்பின் போஸ், அன்ரிச் நோட்ர்ஜே மற்றும் க்வெனா மபாகா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணி வெற்றி

பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 210 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 கேப்டன் எய்டன் மார்க்ரம் 19 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். ரியான் ரிக்கல்டன் 21 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்தில் 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாசினார்.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!
Related image2
T20 உலகக்கோப்பை 2026: நிக்கோலஸ் பூரன், நரேன் இல்லாதால் ஜாம்பவான் ஏமாற்றம்!
33
பவுலிங்கில் அபிஷேக் சர்மா கலக்கல்
Image Credit : Getty

பவுலிங்கில் அபிஷேக் சர்மா கலக்கல்

இந்திய அணி தரப்பில் பவுலிங்கில் கலக்கிய அபிஷேக் சர்மா 3 ஓவரில் 32 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். டி20 உலகக்கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 7ம் தேதி (சனிக்கிழமை) அமெரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை 2026: நிக்கோலஸ் பூரன், நரேன் இல்லாதால் ஜாம்பவான் ஏமாற்றம்!
Recommended image2
U19 WC IND vs AFG: ஆரோன் ஜார்ஜ் சதம், சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. ஆப்கானை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!
Recommended image3
T20 World Cup 2026 : இந்த 5 வீரர்கள் தான் உலகக் கோப்பை முடிவை தீர்மானிப்பார்கள்
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!
Recommended image2
T20 உலகக்கோப்பை 2026: நிக்கோலஸ் பூரன், நரேன் இல்லாதால் ஜாம்பவான் ஏமாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved