MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – டாஸ் கூட போட முடியாமல் IND vs NZ போட்டி ரத்து: 2ஆம் நாள் போட்டி நடக்குமா?

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – டாஸ் கூட போட முடியாமல் IND vs NZ போட்டி ரத்து: 2ஆம் நாள் போட்டி நடக்குமா?

India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain: பெங்களூருவில் மழை காரணமாக இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலே ரத்து செய்யப்பட்டது.

2 Min read
Rsiva kumar
Published : Oct 16 2024, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
India vs New Zealand Day 1 Report

India vs New Zealand Day 1 Report

India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.

210
India vs New Zealand Day 1 Report

India vs New Zealand Day 1 Report

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்று கைப்பற்றிய நிலையில் நியூசிலாந்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

310
India vs New Nealand 1st Test Day 1 Called Off,

India vs New Nealand 1st Test Day 1 Called Off,

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16 ஆம் தேதியான இன்று தொடங்க இருந்தது. ஆனால், பெங்களூருவில் பெய்த மழையின் காரணமாக இன்றைய போட்டி நடைபெறவில்லை.

410
IND vs NZ Test Series, India vs New Zealand Day 1 Match Called Off

IND vs NZ Test Series, India vs New Zealand Day 1 Match Called Off

காலை 9 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் டாஸ் கூட போட முடியவில்லை. மேலும், சீரான இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும் விட்டு விட்டு மழை பெய்தவாறு இருந்தது.

510
M Chinnaswamy Stadium, IND vs NZ 1st Test Day 1 Report

M Chinnaswamy Stadium, IND vs NZ 1st Test Day 1 Report

இதற்கிடையில் உணவு இடைவேளைக்கான நேரமும் வந்தது. அதன் பிறகு மழை நின்று போட்டி தொடங்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை நின்றவாறு இல்லை. இதன காரணமாக, முதல் நாள் போட்டியானது, டாஸ் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

610
India vs New Zealand 1st Test Day 1 Report

India vs New Zealand 1st Test Day 1 Report

மேலும், நாளை 15 நிமிடங்களுக்கு முன்னதாக டாஸ் போடப்பட்டு போட்டிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 8.45 மணிக்கு டாஸ் போடப்பட்டு 9.15 மணிக்கு போட்டிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

710
India vs New Zealand First Test, 2nd Day Schedule

India vs New Zealand First Test, 2nd Day Schedule

2ஆம் நாள் நடைபெறும் செஷன்ஸ்:

முதல் செஷன் – காலை 9.15 மணி முதல் 11.30 மணி

2ஆவது செஷன் – பிற்பகல் 12.10 மணி - 2.25 மணி

3ஆவது செஷன் – பிற்பகல் 2.45 மணி – 4.45 மணி வரை

810
IND vs BAN 2nd Test, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

IND vs BAN 2nd Test, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான 2ஆது டெஸ்ட் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில் முதல் நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 2ஆவது நாள் போட்டி மழையின் காரணமாக நடக்கவில்லை.

910
IND vs BAN 2nd Test, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

IND vs BAN 2nd Test, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3ஆவது நாள் போட்டி நடந்தது. இதில் வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 285/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 146 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.

1010
India vs Bangladesh, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

India vs Bangladesh, India vs New Zealand 1st Test Day 1 Called Off due to Rain

இதையடுத்து இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்தியா கைப்பற்றியது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved