MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI

IND vs ENG: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! கம்பீர், ஷ்ரேயாஸ் பதவி காலி? சாட்டையை எடுக்கும் BCCI

IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை BCCI ஆய்வு செய்ய உள்ளது. பயிற்சியாளர் கெளதம் கம்பீர், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jul 10 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி
Image Credit : ANI

டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால், அணியின் செயல்பாடுகள் குறித்து அவசர ஆய்வை நடத்த BCCI தயாராகி வருகிறது. தொடரின் நான்காவது போட்டியிலும் படுமோசமாகத் தோற்றதால், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை BCCI விரிவாக ஆய்வு செய்யும் என வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலக சாம்பியனாக இருந்தும், இந்திய அணி சந்திக்கும் இரண்டாவது தொடர் தோல்வி இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பயிற்சியாளர் கெளதம் கம்பீர்,  ஷ்ரேயாஸ் பதவிக்கு சிக்கல்
Image Credit : AFP

பயிற்சியாளர் கெளதம் கம்பீர், ஷ்ரேயாஸ் பதவிக்கு சிக்கல்

இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக, அயர்லாந்துக்கு எதிரான தொடரிலும் இந்தியா மோசமாகத் தோற்றது. கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா ஒரு தொடரை இழந்தது. அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஷ்ரேயஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமித்த BCCI-யின் இந்த முயற்சிக்கு, இந்த தொடர் தோல்விகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 

இதனால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவியும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. 2027 வரை அவருக்கு ஒப்பந்தம் இருந்தாலும், சமீபத்திய மோசமான ஆட்டம் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. இதேபோல் ஷ்ரேயாஸ் பொறுப்பேற்றத்தில் இருந்து 4 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் ஷ்ரேயாஸ் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது.

Related Articles

Related image1
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
Related image2
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
34
3வது டி20 போட்டியில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்
Image Credit : X@BCCI

3வது டி20 போட்டியில் 76 ரன்களுக்கு ஆல் அவுட்

பிரிஸ்டலில் நடந்த நான்காவது டி20 போட்டியில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா படுதோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் 202 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி, வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

44
4வது டி20 போட்டியில் படுமோசமான தோல்வி
Image Credit : Getty

4வது டி20 போட்டியில் படுமோசமான தோல்வி

நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் போராடினாலும், மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து, மிக எளிதாக இலக்கை எட்டியது. வெறும் 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அவர்கள் வெற்றி பெற்றனர்.

கேப்டன் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 79 ரன்களும், ஃபில் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடரை இழந்த நிலையில், கடைசிப் போட்டியிலாவது வென்று மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியா முயற்சிக்கும். ஆனால், தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Related Stories
Recommended image1
IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved