MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • பாக்சிங் டே டெஸ்டில் பிட்ச் எப்படி இருக்கும்? புட்டு புட்டு வைத்த கியூரேட்டர்!

பாக்சிங் டே டெஸ்டில் பிட்ச் எப்படி இருக்கும்? புட்டு புட்டு வைத்த கியூரேட்டர்!

MCG Curator Matt Page on IND vs AUS Boxing Day Test 2024: மெல்போர்னில் நடக்கவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற துடிப்புடன் களமிறங்கும். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

2 Min read
Author : SG Balan
Published : Dec 25 2024, 12:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
IND vs AUS 4th Test

IND vs AUS 4th Test

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க ஆயத்தமாக உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
MCG Boxing Day Test 2024

MCG Boxing Day Test 2024

பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோல்வியடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டு இந்தியா தோல்வியைத் தவிர்க்க உதவியது.

38
IND vs AUS Boxing Day Test

IND vs AUS Boxing Day Test

இந்நிலையில், மெல்போர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற துடிப்புடன் களமிறங்கும். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

48
MCG curator Matt Page

MCG curator Matt Page

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்டில் பிட்ச் எவ்வாறு செயல்படும் என்பதை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கியூரேட்டர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

58
Matt Page on MCG pitch

Matt Page on MCG pitch

ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கியூரேட்டர் மேட் பேஜ், "கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் செய்த சேவையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்த முறை அதை மாற்றுவதற்கான எந்தத் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தொடரில் இதுவரை மூன்று சிறந்த ஆடுகளங்களில் மூன்று அருமையான டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துவிட்டோம். எனவே எங்களைப் பொறுத்தவரை, இந்த முறையும் பிட்ச் வழக்கம்போலவே இருக்கும் எனக் நினைக்கிறோம். அது ஒரு பரபரப்பான போட்டியை உருவாக்கும்" என்றார்.

68
IND vs AUS Test Series 2024

IND vs AUS Test Series 2024

"ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மிகவும் தட்டையான ஆடுகளத்தைத் தயாரித்திருந்தோம். பிறகு நாங்கள் டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்கும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனவே இப்போது ஆடுகளங்களில் அதிக புற்களை விட்டுவிடுகிறோம். அது பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும். ஆனால், புதிய பந்து மென்மையடைந்தவுடன் பேட்டிங் செய்ய ஏற்றதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

78
Virat Kohli in Border Gavaskar Trophy 2024

Virat Kohli in Border Gavaskar Trophy 2024

சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பேஜ், "கடந்த 4-5 ஆண்டுகளாக நடைபெற்ற போட்டிகளைத் திரும்பிப் பார்த்தால், இங்கு நடைபெற்ற போட்டிகளில் களம் வேகப் பந்துவீச்சுக்கே அதிக சாதகமாக இருந்திருப்பது தெரியும். சுழற்பந்துவீச்சுக்கு அதிக வாய்ப்பு இருக்காது. இந்த முறையும் அதில் மாற்றம் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகிறோம்" எனக் கூறினார்.

88
IND vs AUS Boxing Day Test Pitch Report

IND vs AUS Boxing Day Test Pitch Report

"மெல்போர்னில் வானிலை நிலவரம் விரைவாக மாறக்கூடும் என்பது எங்களுக்குத் தெரியும். பாக்ஸிங் டே ஆட்டத்தின்போது 40 டிகிரி அளவுக்கு வெயில் இருக்குமா என்றால், அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஈரப்பதம் சற்று அதிகமாக இருக்கும் வகையில் ஆடுகளத்தைக் கண்காணித்து அதற்கேற்ப சரிசெய்வோம்" என்றார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ரோகித் சர்மா
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved