MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!

IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!

IND vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விலகியுள்ளார். இதேபோல் 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Sep 14 2026, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா, ஆப்கானிஸ்தான் 2வது டி20
Image Credit : ANI

இந்தியா, ஆப்கானிஸ்தான் 2வது டி20

இந்திய கிரிக்கெட் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தத் தகவலை அணி நிர்வாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்க வருண் முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியில், அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். குறிப்பாக, டர்விஷ் ரசூலியை தனது மேஜிக் பவுலிங்கால் போல்டாக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வருண் சக்கரவர்த்தி விலகல்
Image Credit : X/BCCI

வருண் சக்கரவர்த்தி விலகல்

ஆனால், காயம் காரணமாக இந்தத் தொடரில் அவர் இனி விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. வருண் சக்கரவர்த்தி சமீபத்தில்தான் இங்கிலாந்து தொடரின்போது அணிக்குத் திரும்பினார். அதற்கு முன், பெங்களூருவில் உள்ள Central of Excellence (CoE) மையத்தில் தனது கால் காயம் காரணமாக நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இப்போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது, பெங்களூரு மையத்தின் காய மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீபகாலமாக பல இந்திய வீரர்கள் காயங்களால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர் காயமடையும் வருண் சக்கரவர்த்தி

இந்த வருடம் வருணுக்கு காயங்கள் நிறைந்ததாகவே உள்ளது. 2026 IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக விளையாடியபோது, ​​அவரது காலில் ஒரு சிறிய எலும்பு முறிவு மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கான சிகிச்சையில் இருந்ததால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் வருண் விளையாடவில்லை. அந்தத் தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர், இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் அணிக்குத் திரும்பிய வருண், இரண்டு போட்டிகளில் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

34
சஞ்சு சாம்சன் நீக்கம்?
Image Credit : x.com

சஞ்சு சாம்சன் நீக்கம்?

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் சிறப்பாக ஆடியதால், அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஜிம்பாப்வே தொடர்களில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20-யில் ஓப்பனராக வாய்ப்பு பெற்ற அவர், 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அணியில் அவரது இடம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஷார்ட் பால் பலவீனம் தொடர்கிறது

ஒரு காலத்தில் சஞ்சுவின் பலவீனமாக இருந்த ஷார்ட் பால் பந்துவீச்சுதான், முதல் டி20-யிலும் அவரை வீழ்த்தியது. அஸ்மத்துல்லா ஓமர்சாய் வீசிய மெதுவான ஷார்ட் பாலில் சிக்ஸர் அடிக்க முயன்றார் சஞ்சு. ஆனால், ஸ்கொயர் லெக் பவுண்டரியில் நின்ற தர்விஷ் ரசூலி அவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார். சஞ்சு சாம்சன் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டால், அபிஷேக் ஷர்மாவுடன் வைபவ் சூர்யவம்ஷி ஓப்பனராக களமிறங்குவார். ஒரே ஒரு போட்டியில் சொத

44
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
சஞ்சு சாம்சன்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Related Stories
Recommended image1
Sanju Samson: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்ஸ்! திலக் வர்மாவுக்கு கல்தா? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!
Recommended image2
Vaibhav Suryavanshi: 15 வயது வீரரை தூக்கிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? எதிர்காலத்தை பாழாக்காதீர்கள்! இந்திய அணியை கிழித்து தொங்கவிட்ட ஸ்வான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved