#ICCWTC ஃபைனல்: வேலையை காட்டிய மழை.. #INDvsNZ டாஸ் தாமதம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மழையால் டாஸ் தாமதம் ஆகியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில், இந்த போட்டி சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கவுள்ளது.
இந்த போட்டி 3 மணிக்கு தொடங்க வேண்டியது. அதனால் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சவுத்தாம்ப்டனில் மழை காரணமாக டாஸ் தாமதமாகியுள்ளது. இந்த போட்டி நடக்கும் இன்று முதல் 22ம் தேதி வரை மழையின் குறுக்கீடு என்று தெளிவுபடுத்தப்பட்டுவிட்டதால், இந்த போட்டியில் மழை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஃபைனலுக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் நேற்றே அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஃபைனலுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.