MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Asia Cup: ஓவராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான்..! ஆப்பு வச்ச ஐசிசி..! அதிரடி நடவடிக்கை!

Asia Cup: ஓவராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான்..! ஆப்பு வச்ச ஐசிசி..! அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விதிகளை மீறி ஆட்டம் போட்ட பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Sep 19 2025, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசிய கோப்பை 2025
Image Credit : Getty

ஆசிய கோப்பை 2025

ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி (ICC) கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. போட்டியின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆட்டம் போட்ட பாகிஸ்தான்
Image Credit : X/ Cricket Fever

ஆட்டம் போட்ட பாகிஸ்தான்

நடப்பு தொடரில் பலமுறை நடத்தை விதிகளை மீறியதாக ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி சன்ஜோக் குப்தா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியின் போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் குறித்து பலமுறை எச்சரித்தும், பாகிஸ்தான் அணி நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் ஐசிசி தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விதிகளை மீறி அட்டூழியம்

ஐக்கிய அரபு அமீரக போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனை போட்டி நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் சந்தித்தார். இந்த சந்திப்பை வீடியோ எடுக்க வேண்டாம் என எச்சரித்தும், பாகிஸ்தானின் ஊடக மேலாளர் அதை கேமராவில் பதிவு செய்து, ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறி அந்தப் படங்களையும் வீடியோவையும் சமூக ஊடகங்களில் பரப்பினார்.

34
பாகிஸ்தானின் நாடகம்
Image Credit : X/ UAE Cricket Official

பாகிஸ்தானின் நாடகம்

இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் கூறியதாகவும் இதனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்கும் வரை ஆசிய கோப்பையில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது. ஆனால் நடுவரை மாற்ற முடியாது என ஐசிசி திட்டவட்டமாக கூறியது. இதனல் யுஏஇக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் நாடகமாடியது.

44
உண்மையை சொன்ன ஐசிசி
Image Credit : Wikimedia Commons

உண்மையை சொன்ன ஐசிசி

இதனைத் தொடர்ந்து ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் மன்னிப்பு கேட்டதால், தாமதமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது. 

ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது டாஸ் சமயத்தில் ஏற்பட்ட தவறான புரிதல் மற்றும் தகவல் தொடர்பு சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணியைச் சந்தித்ததாக ஐசிசி கூறுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கூறுவது போல் மன்னிப்பு கேட்பதற்காக அவர் சந்திக்கவில்லை என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசியக் கோப்பை
ஆசிய கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!
Recommended image2
India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி
Recommended image3
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
ஆசிய கோப்பை: கடைசி வரை திக் திக் திக்..! பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்!
Recommended image2
ஆசிய கோப்பை: ஓமனை சுருட்டி வீசிய பாகிஸ்தான்..! ஸ்பின்னர்கள் கலக்கல்..! மெகா வெற்றி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved