MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது – ஒரு கேப்டனா ஹர்திக் பாண்டியா ஒன்னத்தையும் கிழிக்கல – விளாசும் ரசிகர்கள்!

ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது – ஒரு கேப்டனா ஹர்திக் பாண்டியா ஒன்னத்தையும் கிழிக்கல – விளாசும் ரசிகர்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 23 2024, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், எஞ்சிய 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த 6 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுடன் மோதுகிறது.

26
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

இதில், ஏதேனும், 3 அல்லது 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து பின்னடைவை சந்திப்பதற்கு அணியின் கேப்டன்ஸி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

36
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

ஒரு கேப்டனாக தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாத ஹர்திக் பாண்டியா, பவுலிங்கிலும் சொதப்பி வருகிறார். அதுமட்டுமின்றி புதிய பந்தில் பும்ராவிறு ஓவர் கொடுக்காமல் முதல் ஓவரை தானாகவே வீசி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தாலும், பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி என்று திறமைமிக்க அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

46
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

இவர்கள் தவிர பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா இருக்கிறார். மேலும், தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருக்கிறார். இவர்கள் தவிர, கிரான் பொல்லார்டு, சச்சின் டெண்டுல்கரும் பக்க பலமாக இருக்கின்றனர். அப்படி இருந்தும் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்காக போராடி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே ஹர்திக் பாண்டியா தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

56
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

இந்த சீசனில் அவர் விளையாடிய இன்றைய போட்டி உள்பட 8 போட்டிகளில் றையே 11, 24, 34, 39, 21*, 2, 10, 10 (ஆர்ஆர் போட்டி) என்று மொத்தமாக 151 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், நேற்று நடந்த போட்டி உள்பட 17 ஓவர்கள் வீசி 186 ரன்கள் கொடுத்துள்ளார். அதோடு, 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

66
Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

Rajasthan Royals vs Mumbai Indians, 38th Match

இப்படி காரணங்களை பட்டியலிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் பொறுப்பேற்றால் மட்டுமே அணியின் வெற்றி தொடரும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா
சஞ்சு சாம்சன்
யுஸ்வேந்திர சாஹல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நியூசிலாந்திடம் மண்டியிட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து அவுட்.. பாகிஸ்தானுக்கும் சிக்கல்!
Recommended image2
செமி ஃபைனலுக்கு இந்தியாவுக்குச் சிக்கலா? ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் மட்டும் போதாது - முழு விவரம்!
Recommended image3
அரையிறுதிக்கு ஆப்பு வைத்த இங்கிலாந்து! பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி - நடக்குமா மிராக்கிள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved