சொதப்பிய கேப்டன்கள் - ஹர்திக் பாண்டியா முதலிடம், பாப் டூப்ளெசிஸ் 2ஆம் இடம், ருதுராஜ் கெய்க்வாட் 3ஆவது இடம்!
ஐபிஎல் 2024 தொடரின் கிரிக்கெட் திருவிழாவில் இதுவரையில் நடந்த போட்டிகளின் படி, சொதப்பிய கேப்டன்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
IPL 2024
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இதுவரையில் 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
Indian Premier League 2024
இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று, 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 5ஆவது இடங்களை பிடித்துள்ளன.
MS Dhoni and Ruturaj Gaikwad
இதே போன்று பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 மற்றும் 7 ஆவது இடங்களை பிடித்துள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 மற்றும் 9ஆவது இடங்களை பிடித்துள்ளன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் மட்டுமே விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளன.
Hardik Pandya
ஹர்திக் பாண்டியா:
இந்த சீசனில் சொதப்பிய கேப்டன்களின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாகவும் தோல்வி அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் விளையாடிய 3 போட்டிகளில் முறையே 11, 24, 34 ரன்கள் என்று மொத்தமாக 69 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று பவுலராக 7 ஓவர்கள் வீசி 76 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
Faf duPlessis
பாப் டூப்ளெசிஸ்:
நடப்பு ஆண்டை தோல்வியோடு தொடங்கிய கேப்டன்களில் ஒருவர் ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ். சென்னையில் நடந்த போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரையில் பாப் டூப்ளெசிஸ் விளையாடிய 4 போட்டிகளில் முறையே 35, 3, 8, 19 என்று மொத்தமாக 60 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Ruturaj Gaikwad
ருதுராஜ் கெய்க்வாட்:
சிஎஸ்கே விளையாடிய 4 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும், ஹோம் மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் வெற்றியும், அவே மைதானத்தில் நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு கேப்டனாக அணிக்கு 2 வெற்றியை கொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக 4 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறையே 15, 46, 1, 26 ரன்கள் என்று மொத்தமாக 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.