MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சேவாக் முதல் ஜடேஜா வரை – டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!

சேவாக் முதல் ஜடேஜா வரை – டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்கள்!

Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

3 Min read
Rsiva kumar
Published : Oct 15 2024, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
From Virender Sehwag to Ravindra Jadeja Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

From Virender Sehwag to Ravindra Jadeja Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

Most Sixes in Test Cricket: பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இலங்கைக்கு சென்றிருந்த நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், 2 போட்டியிலும் தோல்வி அடைந்து தற்போது இந்தியாவில் கால் பதித்துள்ளது.

211
Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் தொடங்குகிறது. 2ஆவது போட்டி 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் புனேயில் நடைபெறுகிறது. இதே போன்று 3அவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் மும்பையில் நடைபெறுகிறது.

311
Most Sixes in Test Cricket, India vs New Zealand

Most Sixes in Test Cricket, India vs New Zealand

இந்த மைதானங்கள் எல்லாம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்கள் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. கடைசியாக இரு அணிகளும் 2021 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 352 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

411
India vs New Zealand, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket,

India vs New Zealand, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket,

இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 62 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. நியூசிலாந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எஞ்சிய 27 போட்டிகளுமே டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 3 போட்டியில் ஜெயித்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

511
Indian Cricketers With Most Sixes in Test Cricket, India vs New Zealand

Indian Cricketers With Most Sixes in Test Cricket, India vs New Zealand

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதே போன்று அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பர் 1 இடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து பிஷான் சிங் பேடி, ஈஎஎஸ் பிரசன்னா, அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், வெங்கடராகவன், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

611
IND vs NZ, Most Sixes For India in Test Cricket,

IND vs NZ, Most Sixes For India in Test Cricket,

இந்த நிலையில் தான் நியூசிலாந்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சாதனையை படைக்க இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களின் பட்டியலில் விரேந்திர சேவாக் 90 சிக்ஸகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

ரோகித் சர்மா 87 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

711
Most Sixes For India in Test Cricket, Virender Sehwag

Most Sixes For India in Test Cricket, Virender Sehwag

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்:

விரேந்திர சேவாக்:

2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடிய அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 178 இன்னிங்ஸ் விளையாடி 8503 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 319 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 31 அரைசதங்கள் மற்றும் 23 சதங்கள் அடங்கும். இதில் 1219 பவுண்டரிகளும், 90 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

811
Rohit Sharma, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

Rohit Sharma, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket

ரோகித் சர்மா:

2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மா 61 போட்டிகளில் 105 இன்னிங்ஸ் விளையாடி 4179 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 சதங்களும், 17 அரைசதங்களும் அடங்கும். மேலும், 456 பவுண்டரிகளும், 87 சிக்சர்களும் அடித்துள்ளார்.

911
MS Dhoni, Indian Cricketers With Most Sixes in Test Cricket

MS Dhoni, Indian Cricketers With Most Sixes in Test Cricket

எம்.எஸ்.தோனி:

2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்ஸ் விளையாடி 4876 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்துள்ளார். 6 சதங்கள், 33 அரைசதங்களும் அடித்துள்ளார். மேலும், 544 பவுண்டரிகளும், 78 சிக்ஸர்களும் அடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி 3ஆவது இடம் பிடித்துள்ளார்.

1011
Sachin Tendulkar, Top 5 Indian Players With Most Sixes in Test Cricket,

Sachin Tendulkar, Top 5 Indian Players With Most Sixes in Test Cricket,

சச்சின் டெண்டுல்கர்:

1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸ் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்த சச்சின், 51 சதங்கள், 768 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், 2058க்கும் அதிகமான பவுண்டரிகள் அடித்த சச்சின் 69 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து 4ஆவது இடம் பிடித்துள்ளார்.

1111
Ravindra Jadeja, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket,

Ravindra Jadeja, Top 5 Indian Cricketers With Most Sixes in Test Cricket,

ரவீந்திர ஜடேஜா:

2012 முதல் தற்போது வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வரும் ஜடேஜா 74 போட்டிகளில் 107 இன்னிங்ஸ் விளையாடி 3130 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 4 சதங்கள், 21 அரைசதங்கள் அடித்துள்ளார். அதோடு, 309 பவுண்டரிகளும், 66 சிக்ஸர்களும் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பெங்களூரு
ரவிச்சந்திரன் அஸ்வின்
சச்சின் டெண்டுல்கர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved