எதிரணி தவறு செய்யும் வரை தோனி காத்திருந்து காலி செய்வார்; முன்னாள் பயிற்சியாளர் சுவாரசிய தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கோலியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
Dhoni
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி தலைமையில் பல்வேறு சாதனைகளை படைத்து உலகின் நம்பர் 1 அணியாக வளம் வந்தது. தொடர்ந்து ஐசிசியின் பல கோப்பைகளை வென்று கொடுத்தனர்.
Mahendra Singh Dhoni
தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசியின் 3 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது. மேலும் ஐபில் தொடரை பொறுத்தவரை தோனி தலைமையிலான அணி 5 முறை வென்று சாதனை படைத்துள்ளது.
Virat Kohli
மறுமுனையில் விராட் கோலி தலைமையிலான அணி ஐபிஎல் தொடரில் என்ன தான் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாதது அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கமாக உள்ளது. ஆனால் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற போது தரவரிசைப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது.
Virat Kohli
டெஸ்ட் தரவரிசையில் பரிதாப நிலையில் இருந்த இந்தியாவை கோலி தலைமையிலான படை மீண்டும் தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 2016 முதல் 2021 வரை உலகின் நம்பர் 1 அணியாக வழிநடத்தினார்.
Virat Kohli
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்தும், விராட் கோலி குறித்தும் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில், தோனி ஒரு கேப்டனாக களத்திற்குள் செல்லும் முன் அனைத்து கோணங்களிலும் சிந்திப்பார். அனைத்து ரிஸ்க்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்ற முடிவில் தோனி இருப்பார். மேலும் எதிரணி தவறு செய்யட்டும் அதுவரை காத்திருப்போம் என்று தோனி நினைப்பார். தோனியின் இந்த நம்பிக்கை அருக்கு பல வெற்றிகளை கொடுத்தது.
Kohli
விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா அதிக ரிஸ்க் எடுத்து தங்களது செயல்பாடுகளை முன்னேற்றியது. வெளிநாடுகளில் தங்கள் பெயரை நிலைநாட்ட நாம் 5 பௌலர்களுடன் விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். எதிரணியை கண்டிப்பாக 2 முறை ஆல் அவுட் செய்ய வேண்டும் போன்ற விஷயங்களில் கோலி தீர்க்கமாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.