ரோகித் சர்மாவுக்கே பிளாங்க் செக்கா? ஹைதராபாத் அணிக்காக விலைக்கு வாங்க பார்த்த காவ்யா மாறன்?
கேப்டன் பதவியை இழந்த ரோகித் சர்மாவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது பக்கம் இழுப்பதற்கு திட்டமிட்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
IPL 2025 Mega Auction
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் ரோகித் சர்மா. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அணியின் கேப்டனாக இருந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் அணிக்கு டிராபியை வென்று கொடுத்தார்.
Kavya Maran, SRH
இந்த நிலையில் தான் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு பேட்ஸ்மேனாக அவர் சொதப்பி வந்த நிலையில், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் நீக்கியது. இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ், பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
Kavya Maran, Sunrisers Hyderabad
எப்போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டாரோ அப்போது முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்கட்சி பூசல் நிலவ தொடங்கியது. மேலும், ரோகித் மற்றும் ஹர்திக் ரசிகர்களுக்கு இடையில் மோதல் உண்டானது. பாண்டியாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
Kavya Maran
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 4 போட்டிகளில் ஹாட்ரிக் தோலியோடு, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் கேப்டன் பொறுப்பை இழந்திருக்கும் ரோகித் சர்மாவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவருக்கு காவ்யா மாறன் பிளாங்க் செக் கொடுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
IPL 2025 Mega Auction
மேலும், ஹைதராபாத் அணிக்கு ரோகித் சர்மா வந்தால் அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்து உண்மையான அறிவிப்பு இந்த சீசன் முடிந்த பிறகு கூட வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரோகித் சர்மா இந்த ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
Rohit Sharma
இந்த தொடர் முடிந்த பிறகு அவர் எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளலாம்.
Rohit Sharma, Mumbai Indians, IPL 2024
அதன்படி பார்த்தால் மும்பை அணி ரோகித் சர்மாவை தக்க வைக்காது. அப்படியே தக்க வைக்க நினைத்தாலும் கூட ரோகித் சர்மா அதற்கு சம்மதிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் விதிமுறைப்படி, ஒரு வீரரை மாற்றுவதற்கு அவரது தற்போதைய அணியுடன் தான் பேச வேண்டுமே தவிர, நேரடியாக வீரர்களுடன் பேச கூடாது.
Mumbai Indians, Rohit Sharma
இதற்கு காரணம், அந்த வீரருக்கு அவரது அணி குறிப்பிட்ட தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்து அவரை தக்க வைத்திருக்கும். டிரேட் முறையில் வேண்டுமென்றால் வீரர்களை தங்களுக்குள்ளாக இரு அணிகள் மாற்றிக் கொள்ளலாம்.
Mumbai Indians, Rohit Sharma
2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக ரோகித் சர்மாவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது பக்கம் இழுப்பதற்கு முயன்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்காக, காவ்யா மாறன் பிளாங்க் செக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
Rohit Sharma
இது எந்தவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.