ஓய்வு அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே தோனியின் மாஸான பிளேயரை தட்டி தூக்கிய நடப்பு சாம்பியன் கேகேஆர்: ஏன், எதுக்கு?
சமீபத்தில் ஓய்வு பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணியை வலுப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Dwayne Bravo Joins KKR
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ அனைத்து வடிவ கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து சிறிது நேரத்திலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில் இந்த முக்கிய முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த பிராவோ, கடந்த 2022 ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கேயின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார்.
அந்த சீசனில் சிஎஸ்கே 5ஆவது முறையாக டிராபி வென்றது. பயிற்சியாளராக இடம் பெற்றிருந்த பிராவோவின் முதல் சீசன். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 3ஆவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பிராவோ, 2 முறை அதிக விக்கெட் டேக்கருக்கான பர்பிள் கேப் வென்றுள்ளார்.
இதுவரையில் 582 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ 631 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
Kolkata Knight Riders
வரும் அக்டோபர் மாதம் 41 வயதை எட்டும் பிராவோ, கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கடந்த 10 ஆண்டுகளாக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் இடம் பெறுவதற்கு முன்னதாக பிராவோ கொல்கத்தா அணிக்காக எம்.எல்.சி தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைட்ரஸ் மற்றும் ஐஎல்டி20 தொடரில் அபு தாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான பிராவோ தற்போது கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக இருந்தார். அதற்கு முன்னதாக 2 ஆண்டுகாலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இருந்தார்.
IPL 2025 Mega Auctions - KKR
தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டதை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய வழிகாட்டியைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் பிராவோ விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அணியும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதாவது, எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்புகள் காத்திருக்கின்றன.
Dwayne Bravo - KKR mentor for IPL 2025
எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், யாரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அவர் எடுக்க வேண்டியிருக்கும். இதற்கிடையில், கொல்கத்தா அணி இரண்டு வீரர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பினிஷர் ரிங்கு சிங் ஆகியோரைத் தக்க வைத்துக்கொள்ள கொல்கத்தா அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்பது குறித்து கொல்கத்தா அணி இன்னும் முடிவெடுக்கவில்லை.
KKR Mentor for IPL 2025, Dwayne Bravo
ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில், ஸ்டார்க்கைத் தக்க வைத்துக்கொண்டால் ஆன்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரேன் ஆகியோரை விடுவிக்க வேண்டியிருக்கும் என்பது கொல்கத்தா அணிக்கு பெரும் சிக்கலாக உள்ளது. பல ஆண்டுகளாக அணிக்காக விளையாடி வரும் சுனில் நரேனை அணி நிர்வாகம் விடுவிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
பிலிப் சால்ட் தான் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்படக்கூடிய மற்றொரு வீரர். பல ஆண்டுகளாக அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரையும் ஏலத்திற்கு முன்பு கொல்கத்தா அணி விடுவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.