MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • யார் இந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி? – பஞ்சாப்பை விரட்டி விரட்டி அடித்த ஹீரோ!

யார் இந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி? – பஞ்சாப்பை விரட்டி விரட்டி அடித்த ஹீரோ!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 23ஆவது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிதிஷ் ரெட்டியின் அதிரடியால் 182 ரன்கள் குவித்தது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 10 2024, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Nitish Reddy, Sunrisers Hyderabad, 23rd IPL 2024

Nitish Reddy, Sunrisers Hyderabad, 23rd IPL 2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 23ஆவது லீக் போட்டி தற்போது முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஸ்டார் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டிராவிஸ் ஹெட் 21, அபிஷேக் சர்மா 16, ஹென்ரிச் கிளாசென் 9, எய்டன் மார்க்ரம் 0 என்று வரிசையாக ஏமாற்றம் அளித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Nitish Reddy, Sunrisers Hyderabad, IPL 2023

Nitish Reddy, Sunrisers Hyderabad, IPL 2023

கடைசியில் இளம் வீரர் 20 வயதான நிதிஷ் ரெட்டி தனது 2ஆவது ஐபிஎல் போட்டியிலேயே அதிரடி சரவெடியாக விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இது அவரது முதல் அரைசதம் ஆகும். அவர், 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 37 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

37
Nitish Reddy, SRH

Nitish Reddy, SRH

இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 182 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. நிதிஷ் ரெட்டி எடுத்துக் கொடுத்த 64 ரன்கள் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டது. பவுலிங்கிலும் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார். பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்தார்.

47
PBKS vs SRH, 23rd IPL 2024

PBKS vs SRH, 23rd IPL 2024

யார் இந்த நிதிஷ் ரெட்டி?

கடந்த 2023 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். இதில் அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பவுலிங்கில் மட்டும் 5 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்தார்.

57
Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2024

Punjab Kings vs Sunrisers Hyderabad, IPL 2024

இந்த நிலையில் தான் இந்த சீசனில் 2 போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடங்கும். நேற்று நடந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 33 ரன்கள் கொடுத்தார்.

67

கடந்த 2003 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பிறந்த நிதிஷ் ரெட்டி, ஆந்திரா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். இதில், 17 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் விளையாடியுள்ளார். மேலும், 22 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நிதிஷ் குமார் ரெட்டி குறித்து ஹனுமா விகாரி கூறியிருப்பதாவது: மிகவும் தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிதிஷ் குமார் ரெட்டியின் கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவரது வேலையைவிட்டு விட்டு அவருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

77
PBKS vs SRH, IPL 2024

PBKS vs SRH, IPL 2024

அவர் 17 வயதாக இருக்கும் போதிலிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன். இப்போது ஒரு சிறந்த வீரராக வளர்ந்து நிற்பதை கண்டு பெருமைப்படுகிறேன். எதிர்காலத்தில் ஹைதராபாத் மற்றும் இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஷுதோஷ் சர்மா
இந்தியன் பிரீமியர் லீக்
பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Recommended image2
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image3
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved