சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தையே கதி கலங்க வைத்த 22 வயது இளம் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் யார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த 35ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இளம் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
Who Is Jake Fraser McGurk
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களில் மாயங்க் யாதவ், அஷுதோத் சர்மா, ஷஷாங்க் சர்மா, ஜாக் பிரேசர் மெக்கர்க், அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் போரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match,
இதில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 15 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இந்தப்போட்டியில் ஜாக் பிரேசர் 18 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match, Jake Fraser McGurk
டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்குப் பதிலாக ரூ.20 லட்சத்திற்கு இடம் பெற்றவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஜாக் பிரேசர் மெக்கர்க். பேட்டிங் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங் மூலமாக டெல்லி அணியில் இடம் பெற்றார்.
Who is Jake Fraser McGurk
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான தனது ஐபிஎல் அறிமுக போட்டியில் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இதில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match
யார் இந்த ஜாக் பிரேசர் மெக்கர்க்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ஜாக் பிரேசர் மெக்கர்க். கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பாக்ஸ் ஹில், விக்டோரியாவில் பிறந்துள்ளார். கடந்த மாதம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். இதில், 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்துள்ளார்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match
பிபிஎல் சீசன் 13ல் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டியான மார்ஷ் ஒண்டே கப் டிராபி தொடரில் சவுத் ஆஸ்திரேலியாவிற்காக அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match
'தி ரூஸ்டர்' அல்லது 'ஜேஎஃப்எம்' என்ற புனைப்பெயர் கொண்ட 22 வயதான ஜாக் பிரேசர் மெக்கர்க், கடந்த ஜனவரி மாதம் நடந்த ILT20 இல் டெல்லியின் துணை உரிமையாளரான துபாய் கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார், இதில், 3 போட்டிகளில் விளையாடி 54 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார்.
Delhi Capitals vs Sunrisers Hyderabad, 35th Match
ஐபிஎல் 2024 தொடரி இடம் பெற்ற ஆஸ்திரேலியா வீரர்கள்:
டெல்லி கேபிடல்ஸ்: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஜே ரிச்சர்ட்சன், ஜேக் பிரேசர் மெக்கர்க்.
குஜராத் டைட்டன்ஸ்: ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ வேட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: மிட்செல் ஸ்டார்க்.
மும்பை இந்தியன்ஸ்: டிம் டேவிட், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆஷ்டன் டர்னர்.
பஞ்சாப் கிங்ஸ்: நாதன் எல்லீஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட்.