வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கலக்கி வரும் அர்ஷ்தீப் சிங்கின் சொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9 கோடி ஆகும்.
Arshdeep Singh Net Worth
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் அர்ஷ்தீப் சிங் 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.
Arshdeep Singh Net Worth
ஆரம்பத்தில் இந்தியா அண்டர்19, பஞ்சாப், பஞ்சாப் கிங்ஸ், இந்தியா அண்டர்23 போட்டிகளில் விளையாடியுள்ளார். படிப்பிற்காக கனடா செல்ல அவரது தந்தை அறிவுறுத்திய நிலையில், ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தந்தையிடம் அனுமதி கோரி அதன் பிறகு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார்.
Arshdeep Singh Net Worth
மத்தியப்பிரதேச மாநிலம் குணா என்ற ஊரில் பிறந்துள்ளார். இவரது தந்தை தர்ஷன் சிங். இவர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
Arshdeep Singh Net Worth
தாய் பால்ஜித் கவுர். சகோதரர் ஆகாஷ்தீப் சிங். சகோதரி குர்லீன் கவுர். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார்.
Arshdeep Singh Net Worth
இதே போன்று 2022 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். ஐபிஎல் தொடர் முலமாக ஆண்டுக்கு ரூ.4 கோடி வரையில் வருமானம் ஈட்டும் அர்ஷ்தீப் சிங்கின் மொத்த சொத்த மதிப்பு மட்டும் ரூ.9 கோடி ஆகும்.
Arshdeep Singh Net Worth
ரஞ்சி டிராபி தொடர் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், விஜய் ஹசாரே டிராபி மூலமாக ரூ.25 ஆயிரமும் (நாள் ஒன்றுக்கு), சையத் முஷ்டாக் அலி டிராபி மூலமாக ரூ.17,500 (நாள் ஒன்றுக்கு) வீதம் வருமானம் பெறுகிறார்.
Arshdeep Singh Net Worth
பிசிசிஐ சி கிரேடு ஒப்பந்தம் மூலமாக ரூ.1 கோடி வரையில் சம்பளமாக பெறுகிறார். மை11சர்க்கிள், மை ஃபிட்னஸ், ஆசிக்ஸ் இந்தியா (ASICS India), சண்டிகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு பிராண்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.