அண்ணன் தம்பியா? நண்பர்களா? கோலியின் உறவு பற்றி பேசிய எம்.எஸ்.தோனி!
எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி இடையிலான நட்பு பல ஆண்டுகளாக வளர்ந்தது, பரஸ்பர மரியாதை மற்றும் பாராட்டை அடிப்படையாகக் கொண்டது. இருவரும் களத்தில் மட்டுமல்லாது மைதானத்திற்கு வெளியிலும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
Virat Kohli and MS Dhoni
எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி இடையிலான நட்பு பல ஆண்டுகளாக வளர்ந்தது. அது பரஸ்பரம் மற்றும் போற்றுதலை அடிப்படையாகக் கொண்டது. கிரிக்கெட்டின் 2 ஜாம்பவான்கள் யார் என்றால் அது விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
MS Dhoni and Virat Kohli
இதே போன்று தான் எம்.எஸ்.தோனியும், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இதன் மூலமாக விராட் கோலி மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றனர்.
Virat Kohli and MS Dhoni
தோனி மற்றும் விராட் கோலி இருவரும் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த காலங்களில் இருவரும் ஒருவரையொருவர் பகிரங்கமாக பாராட்டியுள்ளனர். களத்தில் மட்டுமின்றி மைதானத்திற்கு வெளியிலும் இவர்களது நட்பு தெளிவாக தெரிகிறது. விராட் கோலி உடனான உறவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் இருக்கிறார்.
Virat Kohli and MS Dhoni
இருவரும் 2008, 2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறோம். இருவருக்கும் வயது வித்தியாசம் உள்ளது. அதனால், நான் ஒரு மூத்த சகோதரர் அல்லது சக ஊழியர் என்று சொல்லலாமா அல்லது எந்த பெயர் வைத்தாலும் எனக்கு தெரியாது. நாங்கள் மிக நீண்ட காலமாக இந்தியாவிற்காக விளையாடிய சக ஊழியர்களாக இருந்தவர்கள். உலக கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
MS Dhoni and Virat Kohli
ஆனால், கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனியின் நெருங்கிய நண்பர் என்றால் அது யுவராஜ் சிங் தான். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதே போன்று தான் சுரேஷ் ரெய்னாவும், தோனியும் இருவரும் நீண்ட காலமாக நட்பாக பழகி வந்துள்ளனர்.
MS Dhoni and Virat Kohli
இந்திய அணிக்கு 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று 3 டிராபிகளை வென்று கொடுத்தார். விராட் கோலி கேப்டனாக இருந்த போது ஒரு முறை கூட ஐசிசி டிராபிகளை வென்று கொடுக்கவில்லை. ஆனால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
MS Dhoni and Virat Kohli
இதற்கு முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 49 சதங்கள் தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி முறியடித்துள்ளார். அதோடு, ஒரே சீசனில் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.
Virat Kohli and MS Dhoni
மேலும், அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.