சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு? இந்தியால வந்து கோடி கோடியா அள்ளிட்டு போகும் ஆஸ்திரேலியா!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு பரிசுத் தொகையாக ரூ.33 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா பரிசுத் தொகை
இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இந்தியா பரிசுத் தொகை
இந்த தொடரில் இந்தியா விளையாடிய 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
உலகக் கோப்பை 2023 பரிசுத் தொகை
இதையடுத்து நடந்த அரையிறுதில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
6ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்
நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.
இந்தியா - ஆஸ்திரேலியா உலகக் கோப்பை 2023
அதுமட்டுமின்றி இந்திய அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்தியா 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை பரிசுத் தொகை
இந்த நிலையில் ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கலாம். இந்திய ரூபாய் மதிப்பில் ஆஸ்திரேலியாவிற்கு ரூ.33 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி
இதே போன்று 2ஆவது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.16 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அரையிறுதியோடு வெளியேறிய நியூசிலாந்திற்கு ரூ.6.5 கோடியும், தென் ஆப்பிரிக்காவிற்கு ரூ.6 கோடி வரையிலும் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
உலகக் கோப்பை 2023
இது தவிர லீக் போட்டிகளுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு தலா 86 லட்சம் ரூபாய் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், லீக் சுற்றில் வெற்றி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் ஒரு போட்டிக்கு ரூ.33 லட்சம் வரையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.