- Home
- Sports
- Sports Cricket
- சாந்தனுவின் இராவண கோட்டம் பட இயக்குநர் திடீர் மரணம் – பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட துயரம்!
சாந்தனுவின் இராவண கோட்டம் பட இயக்குநர் திடீர் மரணம் – பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட துயரம்!
Vikram Sugumaran Passed Away : சாந்தனுவின் இராவண கோட்டம் பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உயிரிழப்பு
Vikram Sugumaran Passed Away : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். முதலில் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். கடந்த 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் வெளியான 56 குறும்படங்கள், ஜூலி கணபதி போன்ற படங்கள் உள்பட இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றியுள்ளார்.
பொல்லாதவன் படத்தில் நடித்தார்
அப்போது தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் நடித்தார். அதன் பிறகு சசிகுமாரின் கொடிவீரன் படத்திலும் நடித்தார். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மத யானைக் கூட்டம் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
இராவண கோட்டம்
இந்தப் படத்தைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இராவண கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் சாந்தனு, ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா, அருள்தாஸ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரியளவிற்கு வரவேற்பு பெறவில்லை. கடைசியாக ஏறுதழுவலை மையமாக கொண்ட தேரும் போரும் என்ற படத்தை இயக்கி வந்தார்.
விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு
ஆனால் இந்தப் படம் இன்னும் முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இயக்குநராக மட்டுமின்றி நடிகரும், எழுத்தாளருமாக தன்னை சினிமாவில் வெளிக்காட்டினார். இந்த நிலையில் தான் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார். மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது பேருந்திலேயே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு சாந்தனு இரங்கல்
விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அன்பு சகோதரரே, உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் போற்றுவோம். விரைவில் சென்றுவிட்டீர்கள். உங்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம் என்று பதிவிட்டுள்ளார்.