IPL 2024, Delhi Capitals Impact Player: இம்பேக்ட் பிளேயராக விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்!
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராக விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024 Delhi Capitals Impact Player
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்பட்ட வீரராக அறிவிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி பிரவீன் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், லுங்கி நிகிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், இஷாந்த் சர்மா, யாஷ் துல், முகேஷ் குமார் ஆகியோர் பலரும் தக்க வைக்கப்பட்டனர்.
Rishabh Pant
கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் இடம் பெறவில்லை. காயம் குணமடைந்த நிலையில் தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்து தன்னை தயார்படுத்தி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது.
Delhi Capitals Impact Player
இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இம்பேக்ட் பிளேயராக விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்பேக்ட் பிளேயராக விளையாட இருப்பதால் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rishabh Pant Impact Player
இம்பேக்ட் பிளேயர் விதியின்படி, போட்டியின் போது எந்தவொரு அணியும், தங்களது 11 பேர் கொண்ட அணியில் உள்ள வீரர் ஒருவருக்குப் பதிலாக அவர்களது அணியிலுள்ள 5 மாற்று வீரர்களில் யாரேனும் ஒருவரை களமிறக்கிக் கொள்ளலாம். இந்த இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலமாக ரிஷப் பண்ட் அணியில் இம்பேக்ட் பிளேயராக விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் பர்ஸ் தொகையாக ரூ.28.95 கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.