உச்சி வெயில், அடிச்ச அடில, என்ன செய்யன்னு தெரியாம கதி கலங்கி போன மும்பை – டெல்லி 257 ரன்கள் குவிப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரின் 43ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்துள்ளது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 43ஆவது லீக் போட்டி தற்பொது அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
DC vs MI 43d IPL 2024 Match
இதில், மெக்கர்க் முதல் ஓவரிலேயே 19 ரன்கள் குவித்தார். 2ஆவது ஓவரில், 18 ரன்களும், 3ஆவது ஓவரில் 18 ரன்களும் எடுக்கவே, டெல்லி கேபிடல்ஸ் 2.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மெக்கர்க் 15 பந்துகளில் 52 ரன்கள் குவித்து 2ஆவது முறையாக 15 பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், அவர், 27 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
அபிஷேக் போரெல் நிதானமாக விளையாடி 36 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடல்ஸ் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்தது. அதன் பிறகு ஷாய் ஹோப் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியை தொடங்கினர். இதில், ஹோப் 17 பந்துகளில் 5 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பண்ட் 29 ரன்களில் வெளியேறினார்.
DC vs MI,43rd IPL 2024
கடைசியாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்ஷர் படேல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அக்ஷர் படேல் 11 ரன்னும், ஸ்டப்ஸ் 48 ரன்னும் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
இதற்கு முன்னதாக 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் எடுத்த 231 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது இதனை மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி முறியடித்துள்ளது. மேலும், கடந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 224/4 ரன்கள் எடுத்திருந்தது. அதற்கும் முன்னதாக 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 228/4 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட், ஜஸ்ப்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். இதில், அதிகபட்சமாக லூக் உட் 4 ஓவர்களில் 68 ரன்கள் குவித்தார்.