MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் –6ஆவது இடத்திற்கு சரிந்த சிஎஸ்கே!

புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் –6ஆவது இடத்திற்கு சரிந்த சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 43ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 28 2024, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்று மும்பை கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஜாக் பிரேசர் மெக்கர்க் 84 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 41 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் எடுத்து 68 ரன்கள் கொடுத்தார். நுவான் துஷாரா 56 ரன்கள் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்தார். பும்ரா, சாவ்லா மற்றும் நபி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

38
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே திணறி வந்த ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த இஷான் கிஷான் 14 ரன்களில் வெளியேறினார்.

48
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் கூட்டணி சேர்ந்து விளையாடினர். இதில், சூர்யகுமார் யாதவ் 2 சிக்ஸர்கள் விளாசிய நிலையில் 26 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். மும்பை இந்தியன்ஸ் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது.

58
DC vs MI, IPL 2024

DC vs MI, IPL 2024

ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிய நிலையில், 46 ரன்களில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த நேஹல் வதேரா 4 ரன்னில் வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தது. டிம் டேவிட் களமிறங்கி சரவெடியாக சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார்.

68
Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

Delhi Capitals vs Mumbai Indians, 43rd IPL 2024 Match

கடைசியில் டிம் டேவிட்டும் 37 ரன்னில் வெளியேறினார். முகமது நபி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அடித்து விளையாட வேண்டிய நிலையில், 19ஆவது ஓவரில், 2 சிக்ஸர் உள்பட 16 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியில் 20ஆவது ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. இதில், முதல் பந்திலேயே திலக் வர்மா 2 ரன் எடுக்க ஆசைப்பட்டு ரன் அவுட்டானார். அவர், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்தார்.

78
Delhi Capitals

Delhi Capitals

இறுதியில் பியூஷ் சாவ்லா 10 ரன்னும், லூக் உட் 9 ரன்னும் எடுக்கவே மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

88
IPL 2024 Points Table

IPL 2024 Points Table

5ஆவது இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. மேலும், சிஎஸ்கே இன்று விளையாடும் 46ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னையின் ஹோம் மைதானமான எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
DC vs MI
டெல்லி கேபிடல்ஸ்
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
ரிஷப் பண்ட்
ரோகித் சர்மா
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Recommended image3
IND vs NZ 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. கோலி அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved