MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • LSG 4ஆவது வெற்றிக்கு ஆப்பு வச்ச DC – அறிமுக வீரரின் அதிரடியால் கிடைத்த 2ஆவது வெற்றி!

LSG 4ஆவது வெற்றிக்கு ஆப்பு வச்ச DC – அறிமுக வீரரின் அதிரடியால் கிடைத்த 2ஆவது வெற்றி!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 12 2024, 11:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th IPL Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th IPL Match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்று லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி கேஎல் ராகுல் மற்று குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
216
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதில், குயீண்டன் டி காக் 19 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் கலீல் அகமது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அதே மாதிரி எல்பிடபிள்யூ முறையில் நடையை கட்டினார்.

316
Delhi Capitals

Delhi Capitals

இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 8 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரை வீசிய நிலையில் அந்த ஓவரின் 3ஆவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

416
LSG vs DC

LSG vs DC

அடுத்த பந்திலேயே கூக்ளியில் நிக்கோலஸ் பூரன் கோல்டன் டக் முறையில் கிளீன் போல்டானார். அதன் பிறகு வந்த தீபக் கூட 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக லக்னோ அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

516
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

மீண்டும் வந்த குல்தீப் யாதவ் கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். நடுவர் அவுட் தர மறுக்க ரிஷப் பண்ட் ரெவியூ கேட்டார். பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது.

616
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதையடுத்து கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக குல்தீப் யாதவ் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசியில் எஞ்சிய 2 ஓவர்களையும் வீசி 20 ரன்களில் ஓவரை முடித்தார்.

716
LSG vs DC, 26th IPL Match

LSG vs DC, 26th IPL Match

குர்ணல் பாண்டியாவும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 12.6 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசியில் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

816
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதில் ஆயுஷ் பதோனி 31 பந்துகளில் அரைசதம் அடித்து லக்னோ அணிக்கு ஆறுதல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று அர்ஷாத் கான் 16 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

916
Jake Fraser-McGurk, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

Jake Fraser-McGurk, Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match

இதன் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 6ஆவது விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8 விக்கெட்டிற்கும் ஆயுஷ் பதோனி மற்றும் அர்ஷாத் கான் இருவரும் 73* ரன்கள் பார்ட்னர்ஷிர் எடுத்துக் கொடுத்துள்ளனர்.

1016
LSG vs DC 26th IPL Match 2024

LSG vs DC 26th IPL Match 2024

இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

1116
Ayush Badoni, Lucknow Super Giants

Ayush Badoni, Lucknow Super Giants

பின்னர் கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதே போன்று நிதானமாக விளையாடிய பிரித்வி ஷா 32 ரன்களில் நடையை கட்டினார்.

1216
Kuldeep Yadav, Delhi Capitals

Kuldeep Yadav, Delhi Capitals

அடுத்து வந்த அறிமுக வீரர் ஜாக் ஃப்ரேஸர் மெக்கர்க் அதிராடியாக விளையாடி ரன்கள் குவித்தார். குர்ணல் பாண்டியா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இவருடன் இணைந்து ரிஷப் பண்ட் அதிரடியை காட்டினார்.

1316
LSG vs DC 26th IPL Match 2024

LSG vs DC 26th IPL Match 2024

இதில் மெக்கர் தனது அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த நிலையில் 35 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் இறங்கி அடிக்கு முயற்சித்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது தனது பேட்டையும் கீழே போட்டார். அது ராகுல் கையில் பட்டுள்ளது.

1416
Lucknow Super Giants vs Delhi Capitals

Lucknow Super Giants vs Delhi Capitals

இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர். கடைசியில் 18.1 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

1516
LSG vs DC 26th IPL Match 2024

LSG vs DC 26th IPL Match 2024

இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 4ஆவது போட்டியில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது. 

1616
Lucknow Super Giants vs Delhi Capitals

Lucknow Super Giants vs Delhi Capitals

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், ஆர்சிபி 9ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதே போன்று லக்னோ தோல்வி அடைந்த நிலையில் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதோடு, சிஎஸ்கே 4ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
கே. எல். ராகுல்
குருணல் பாண்டியா
குல்தீப் யாதவ்
ரிஷப் பண்ட்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved