IPL 2023:முதல் வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடள்ஸ்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இன்று டெல்லியில் நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். ரைலீ ரூசோவுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட்டும், அமான் கானுக்கு பதிலாக கமலேஷ் நாகர்கோட்டியும் ஆடுவார்கள் என்று தெரிகிறது.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ஃபிலிப் சால்ட், அபிஷேக் போரெல், அக்ஸர் படேல், லலித் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, லுங்கி இங்கிடி.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபுக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடுவார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஷத் கான், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா.