#AUSvsIND இந்திய அணியில் இவரை தூக்கிட்டு அவரை சேர்க்க இதுதான் சரியான டைம்..! சீனியர் வீரருக்கு ஆப்பு..?
First Published Dec 20, 2020, 3:50 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விக்கெட் கீப்பரை மாற்ற வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து, அடுத்தடுத்த போட்டிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

குறிப்பாக, பிரித்வி ஷாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அதேபோல விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவை நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?