ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் காத்திருக்கும் பெரும் சவால்..! முன்னாள் ஜாம்பவான் எச்சரிக்கை

First Published 16, Sep 2020, 5:18 PM

ஐபிஎல் 13வது சீசன் இன்னும் இரண்டே நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான தோனி தலைமையிலான சிஎஸ்கேவிற்கு எதிர்கொள்ளப்போகும் பெரும் சவாலை சுட்டிக்காட்டி முன்கூட்டியே எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ்.

வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த சீசனில் 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை தூக்க துடிக்கும் சிஎஸ்கே அணிக்கு, அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் ஆடாதது பெரும் பின்னடைவு என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவானும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார்.

ஐபிஎல்லில் 5368 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இருக்கும் ரெய்னா, ஐபிஎல்லில் கோலோச்சும் வெற்றிகரமான பேட்ஸ்மேன். இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு.

சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் ஷேன் வாட்சன், ராயுடு, டுப்ளெசிஸ், கேதர் ஜாதவ், தோனி, முரளி விஜய், பிராவோ என ஜடேஜாவை தவிர அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்கள். அந்தவகையில், ரெய்னா மட்டுமே இடது கை பேட்ஸ்மேனாக இருந்து, அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு நல்ல காம்பினேஷனை அளித்ததுடன், பேட்டிங் வரிசைக்கு வலுவும் சேர்த்தார்.

இந்நிலையில், ரெய்னா இந்த சீசனில் ஆடாத நிலையில், அவரது 3ம் வரிசையில் இறங்கப்போவது யார், யாரை வைத்து ரெய்னாவின் இடத்தை நிரப்பப்போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், ரெய்னா இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கேவிற்கு பெரும் இழப்பு என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள டீன் ஜோன்ஸ், இந்த சீசனில் ரெய்னா ஆடாதது சிஎஸ்கேவிற்கு பெரும் இழப்பு. சிஎஸ்கே அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்கள். ரெய்னா மட்டுமே இடது கை வீரராக இருந்தார். அதுமட்டுமல்லாது ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக ஆடக்கூடிய வீரர் ரெய்னா.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் கண்டிப்பாக இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை. இல்லையெனில் அந்த அணி கடும் பாதிப்பை சந்திக்கும். அனைவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருந்தால், ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம்.

சிஎஸ்கே அணி ஆடும் லெவன் காம்பினேஷனை எவ்வாறு தேர்வு செய்யப்போகிறது என்பது ஃப்ளெமிங் மற்றும் தோனியின் கையில் தான் உள்ளது. சாம் கரன்/ஜடேஜா மற்றும் பிராவோ/இம்ரான் தாஹிர் இந்த இரண்டு காம்பினேஷனில் யாரை எடுப்பார்கள், யாரை நீக்குவார்கள் என்று பார்ப்போம் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

loader