MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மொடா குடி வார்னர்..! மூச்சுமுட்ட குடித்துவிட்டு போலீசிடம் வசமாக சிக்கிய டேவிட் வார்னர்..

மொடா குடி வார்னர்..! மூச்சுமுட்ட குடித்துவிட்டு போலீசிடம் வசமாக சிக்கிய டேவிட் வார்னர்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Apr 07 2026, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர்..
Image Credit : Asianet News

ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை (5 ஏப்ரல் 2026) மாலை சுமார் 5:30 மணியளவில், சிட்னியின் மரூப்ரா (Maroubra) பகுதியில் உள்ள மலபார் சாலையில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வார்னர் ஓட்டி வந்த வேன், சோதனைச் சாவடிக்குச் சற்று முன்னதாகவே ஓரமாக நிறுத்தப்பட்டது.

இதைக்கண்டு சந்தேகமடைந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு அதிகாரிகள், அந்த வாகனத்தை நெருங்கிச் சென்று ஓட்டுநரைச் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்தது கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் என்பது தெரியவந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
இரு மடங்கு கூடுதல் மது!
Image Credit : X/@CallMeSheri1_

இரு மடங்கு கூடுதல் மது!

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சுவாசப் பரிசோதனையில் (Breath test) மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வார்னர் கைது செய்யப்பட்டு மரூப்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட விரிவான பரிசோதனையில், அவரது உடலில் மதுவின் அளவு 0.1 ஆக இருந்தது கண்டறியப்பட்டது. இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் இரண்டு மடங்கு கூடுதலாகும்.

Related Articles

Related image1
தெலுங்கு படத்தில் அறிமுகமான டேவிட் வார்னர்! ஸ்ரீலீலாவுடன் குத்தாட்டம்! வைரல் வீடியோ!
Related image2
ராபின்ஹூட் படத்தில் கேமியோவில் அசத்தியிருக்கும் பக்கா ஸ்டைலிஷ் பிளேயர் டேவிட் வார்னர்!
34
நீதிமன்றத்தில் ஆஜர்
Image Credit : Getty

நீதிமன்றத்தில் ஆஜர்

கைது நடவடிக்கைக்குப் பிறகு வார்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிகளில் விளையாடச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வரும் மே மாதம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

44
வார்னரின் கிரிக்கெட் பயணம்
Image Credit : Getty

வார்னரின் கிரிக்கெட் பயணம்

39 வயதான டேவிட் வார்னர், கடந்த 2024-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். குறிப்பாக, 2024 ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த வார்னர், தற்போது பல்வேறு நாடுகளின் டி20 லீக் போட்டிகளிலும், ஊடகத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Recommended image2
IPL 2026: பிளேஆஃப்-க்குள் நுழைந்தது ராஜஸ்தான்! 'டாப் 4' அணிகளின் பிளேஆஃப் அட்டவணை இதோ!
Recommended image3
Arjun Tendulkar: உன் கால்கள் தரையில் இருக்கட்டும்! மகன் அர்ஜூனை பாராட்டி சச்சின் உருக்கமான பதிவு!
Related Stories
Recommended image1
தெலுங்கு படத்தில் அறிமுகமான டேவிட் வார்னர்! ஸ்ரீலீலாவுடன் குத்தாட்டம்! வைரல் வீடியோ!
Recommended image2
ராபின்ஹூட் படத்தில் கேமியோவில் அசத்தியிருக்கும் பக்கா ஸ்டைலிஷ் பிளேயர் டேவிட் வார்னர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved