- Home
- Sports
- Sports Cricket
- விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? உண்மையை உடைத்த சேத்தன் சர்மா!
விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? உண்மையை உடைத்த சேத்தன் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையிலான உறவு குறித்து தெரிவித்துள்ள

ரோகித் சர்மா - விராட் கோலி
ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்த நிலையில், அதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது.
ரோகித் சர்மா - விராட் கோலி
இந்த நிலையில், விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கு ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு ஐசிசி சாம்பியன் டிராபியை கூட வெல்லவில்லை.
ரோகித் சர்மா - விராட் கோலி
சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது, அவரது தலைமையின் கீழ் செயல்பட்ட நிர்வாகத்திற்கும், கோலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
ரோகித் சர்மா - விராட் கோலி
மற்றொரு காரணமாக ரோகித் சர்மாவின் தூண்டுதல் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியனஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வந்ததைத் தொடர்ந்து அவரை கேப்டனாக பிசிசிஐ திட்டமிட்டதாக கூறப்பட்டது.
ரோகித் சர்மா - விராட் கோலி
இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையிலான சர்ச்சை குறித்த உண்மையை தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா வெளியிட்டுள்ளார். தனியார் சேனலில் நடந்த ஸ்டிங் ஆபரேஷனில் அவர் உண்மையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ரோகித் மற்றும் விராட் கோலி இடையிலான எந்தவித சண்டையும், சச்சரவும் கிடையாது. ஆனால், ஈகோ மோதல் மட்டும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இருவரும் தனித்தனியாக இரு குழுக்களாக தெரிகின்றனர்.
ரோகித் சர்மா - விராட் கோலி
கேப்டன்சியை பொறுத்தவரையில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக மட்டும் நாங்கள் செயல்படவில்லை. ஆனால், விராட் கோலிக்கு எதிராக செயல்பட நினைத்தோம் என்பது தான் உண்மை. இவ்வளவு ஏன், பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கு கோலியை பிடிக்காது. இதன் காரணமாக கோலியின் மோசமான ஆட்டத்தை வைத்து அவரை பதவியிலிருந்து நீக்கினோம்.
ரோகித் சர்மா - விராட் கோலி
டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கு தனித்தனி கேப்டன் இருப்பது சரியாக இருக்காது என்று நினைத்து தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ரோகித் மற்றும் கோலிக்கு இடையில் எந்தவித சண்டையும் கிடையாது என்பது தெளிவாகிறது.