#AUSvsIND காயத்தால் களத்தைவிட்டு வெளியேறிய புஜாரா..! இந்திய வீரர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி.. முக்கியமான அப்டேட்
First Published Jan 2, 2021, 2:05 PM IST
3வது டெஸ்ட்டுக்கு முந்தைய வலைப்பயிற்சியின்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாராவுக்கு கையில் அடிபட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட்டில் ரஹானே மற்றும் ஷுப்மன் கில்லின் சிறப்பான பேட்டிங்காலும் பவுலர்களின் அபாரமான பந்துவீச்சாலும் தான் இந்திய அணி வெற்றி பெற்றது.

வரும் 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடுகிறார். கடந்த 2018-2019 சுற்றுப்பயணத்தில் மிகச்சிறப்பாக ஆடிய இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா, இந்த தொடரில் முதல் 2 போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. கோலி இல்லாத நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற புஜாரா நன்றாக ஆடியாக வேண்டும்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?