ஸ்டோய்னிஸ், ஹென்றி இருக்கும் போது பிஷ்னோய்க்கு 18ஆவது ஓவர் கொடுத்து சூனியம் வச்சுகிட்ட ராகுல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ரவி பிஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 19 ரன்கள் கொடுத்தது போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டது.
Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி தற்போது ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
இதில், டாஸ் வென்ற லக்னோ கேப்டன் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட்டிஞ் செய்த சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா 0, ஷிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1, ருதுராஜ் கெய்க்வாட் 17 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
அஜிங்க்யா ரஹானே 36, மொயீன் அலி 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜடேஜா 57 ரன்னுடனும், தோனி 28 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.
KL Rahul, Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் கூடுதலாக 2 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து மொத்தமாக 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் முறையே 8, 10, 19, 15, 19 என்று மொத்தமாக 71 ரன்கள் எடுக்கப்பட்டது.
MS Dhoni, CSK,
இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேட் ஹென்ரி ஆகியோர் சிறப்பாக பந்து வீசியிருந்த நிலையில் 18ஆவது ஓவரை அவர்களிடம் கொடுக்காமல், ஸ்பின்னரான ரவி பிஷ்னோயிடம் கொடுத்தது. அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 19 ரன்கள் எடுக்கப்பட்டது. 17 ஓவர்கள் வரையில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
அடுத்த ஒரு ஓவரில் சிஎஸ்கேயின் ஸ்கோர் 142 ஆக உயர்ந்தது. அதன் பிறகு வந்த மோசின் கான், யாஷ் தாக்கூர் இருவருமே வேகமாக பந்து வீசுவதை நோக்கமாக கொண்டிருந்தனர். பவுலிங்கில் ஒரு மாற்றமும் செய்யவில்லை. அதாவது, ஸ்லோயர் பந்து, யார்க்கர் பந்து, நக்குல் பந்து என்று எதுவும் அவர் வீசவில்லை. மேலும், சில பந்துகளை வைடாக வீசினர்.
Lucknow Super Giants vs Chennai Super Kings, 34th Match
டெத் ஓவர்களில் அணியின் கேப்டன் பவுலர்களிடம் சென்று பேச வேண்டும். அவர்களது ஓவர்களில் அடிக்கும் போது அவர்கள் அழுத்தத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் கேஎல் ராகுல் தனக்கு தானே ஆப்பு வச்சுக் கொண்டார்.
LSG vs CSK, IPL 34th Match
லக்னோ அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் குர்ணல் பாண்டியா 2 விக்கெட்டும், மோசின் கான், யாஷ் தாக்கூர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.