#AUSvsIND காயத்தால் பும்ராவும் விலகல்..! இந்திய அணிக்கு மரண அடி
First Published Jan 12, 2021, 6:50 PM IST
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் பும்ரா ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வீரர்களின் காயம் தொடர் சோகமாக அமைந்துள்ளது. ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா ஆகிய வீரர்களை தொடர்ந்து பும்ராவும் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி பிரிஸ்பேனில் நடக்கும் டெஸ்ட் தான். ஆனால் அந்த முக்கியமான போட்டியில், பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?