- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகல்! பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்த பிசிசிஐ!
ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகல்! பாகிஸ்தானுக்கு பலத்த அடி கொடுத்த பிசிசிஐ!
ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலக முடிவெடுத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

BCCI decides to withdraw from Asian cricket series
பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் ஜூன் மாதம் நடைபெறவிருந்த பெண்கள் அணிகளுக்கான ஆசிய கோப்பையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பையில் இருந்து விலகும் இந்தியா
இப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளார். அவர் இருக்கும் அமைப்பின் கீழ் இந்தியா விளையாட விரும்பவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பை போட்டியின் நிதி ஆதரவில் பெரும் பகுதி இந்திய ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு பிசிசிஐ கொடுக்கும் அழுத்தம்
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) 2024 இல் ஆசிய கோப்பை நிகழ்வுகளுக்கான ஊடக உரிமைகளை எட்டு ஆண்டுகளில் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. பிசிசிஐ ஆசிய கோப்பையில் இருந்து விலகினால் இந்தியா ஸ்பான்சர் நிறுவனங்களும், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனமும் அதில் இருந்து விலகும்.
இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். ஆகவே இது பாகிஸ்தானுக்கு பிசிசிஐ கொடுக்கும் பெரும் அழுத்தம் என கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட வாய்ப்பு
மேலும் இந்தியா விளையாடாமல் வெறும் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வைத்து ரசிகர்கள் போட்டியை காண வர மாட்டார்கள். மேலும் ஒளிபரப்பு உரிம நிறுவனமும், ஸ்பான்சர்களும் விலகுவதால் ஆசிய கோப்பையை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாத இந்தியா
ஏற்கெனவே பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), எதிர்கால போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி இருந்தது.
இந்தியாவை பொறுத்தவரை 2029ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை பாகிஸ்தான் நடத்திய நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்தது. அந்த போட்டிகளை இந்தியா இலங்கை சென்று விளையாடியது.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் நடத்தியது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் புறக்கணித்து தங்களுக்குரிய போட்டிகளை துபாயில் விளையாடி கோப்பையையும் தட்டித்தூக்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடைபெற்ற BCCI உடனான முன் ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் தனது ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.