MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2026: குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை.. ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்குத் தடை.. பிசிசிஐ 'கறார்' விதிகள்

IPL 2026: குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை.. ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்குத் தடை.. பிசிசிஐ 'கறார்' விதிகள்

IPL 2026 Rules: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அணிகளுக்கு பல்வேறு விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 25 2026, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 விதிமுறைகள்
Image Credit : Getty

ஐபிஎல் 2026 விதிமுறைகள்

ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல் ஆரம்பிப்பதற்கு முன்பே, அணிகளுக்கான புதிய மற்றும் கடுமையான விதிகளை BCCI அறிவித்துள்ளது. பயிற்சி, பயணம், மைதான ஒழுக்கம் மற்றும் உதவியாளர்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. என்னென்ன விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போட்டி நாளில் பயிற்சிக்குத் தடை
Image Credit : Getty

போட்டி நாளில் பயிற்சிக்குத் தடை

பிசிசிஐயின் புதிய விதிமுறைப்படி, போட்டி நடக்கும் நாளில் வீரர்கள் மெயின் கிரவுண்டில் பயிற்சி செய்ய முடியாது. அதே நாளில் ஃபிட்னஸ் டெஸ்ட் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நெட்ஸில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்குப் பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கு கடுமையான நிபந்தனைகள்

பயிற்சி செய்யும் இடங்களில், அதிகாரப்பூர்வ வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. துணை பந்துவீச்சாளர்கள் மற்றும் ‘த்ரோடவுன்’ ஸ்பெஷலிஸ்டுகள் BCCI-யிடம் முன் அனுமதி பெற வேண்டும். வீரர்கள் டீம் பஸ்ஸில் தான் பயிற்சிக்கு வர வேண்டும், அவர்களது குடும்பத்தினர் இந்த பஸ்ஸில் பயணிக்க முடியாது.

Related Articles

Related image1
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
Related image2
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
34
குடும்பத்தினருக்குத் தனி ஏற்பாடுகள்
Image Credit : Getty

குடும்பத்தினருக்குத் தனி ஏற்பாடுகள்

வீரர்களின் குடும்பத்தினர் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸில் அமர ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம், மைதானத்தில் ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்த BCCI முயல்கிறது.

பயிற்சியின்போது கூடுதல் விதிகள்

பயிற்சியின்போது, LED விளம்பரப் பலகைகளில் பந்து படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிரணிக்காகத் தயார் செய்யப்பட்ட பிட்ச்சை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் இரண்டு நெட்ஸ் மற்றும் மெயின் பிட்ச் அருகே உள்ள விக்கெட்டில் பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படும்.

44
ரசிகர்களுக்கு RCB அஞ்சலி
Image Credit : Getty

ரசிகர்களுக்கு RCB அஞ்சலி

இதற்கிடையே, ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களின் நினைவாக, RCB அணி சில சிறப்பு முடிவுகளை எடுத்துள்ளது. பயிற்சியின்போது வீரர்கள் 11-ம் நம்பர் ஜெர்சியை அணிவார்கள். மேலும், ஸ்டேடியத்தில் 11 நாற்காலிகள் காலியாக வைக்கப்படும்.

கையில்லாத ஜெர்சி அணியக்க்கூடாது

போட்டி நடைபெறும் நாளில் கூடுதல் கட்டுப்பாடுகளை பொறுத்தவரை மைதானத்தில் மருத்துவர் உட்பட 12 உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அனைவரும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

மாற்று வீரர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அமர வேண்டும். ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வென்றவர்கள், பரிசளிப்பு விழாவில் அந்தந்த கேப்களை அணிய வேண்டும். கையில்லாத ஜெர்சி (Sleeveless jersey) மற்றும் தொளதொளப்பான தொப்பிகளுக்கு (Floppy hats) தடை மற்றும் ஜெர்சி எண்ணை மாற்றினால், 24 மணி நேரத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
RR vs GT: ராஜஸ்தானை பந்தாடி மாஸாக பைனல் சென்ற குஜராத்! சுப்மன் கில் மிரட்டல் சதம் விளாசி சாதனை!
Recommended image2
Sai Sudharsan: இது என்ன கொடுமை! மீண்டும் 'ஹிட் விக்கெட்'! மோசமான சாதனை படைத்த சாய் சுதர்சன்!
Recommended image3
RR vs GT: பவர்பிளேயில் மட்டும் 500+ ரன்கள்! அன்கேப்டு வீரராக வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை!
Related Stories
Recommended image1
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
Recommended image2
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved