- Home
- Sports
- Sports Cricket
- Dream 11 ஐ கைகழுவிய பிசிசிஐ! இந்திய அணியின் புதிய 'ஸ்பான்சர்' எந்த நிறுவனம் தெரியுமா?
Dream 11 ஐ கைகழுவிய பிசிசிஐ! இந்திய அணியின் புதிய 'ஸ்பான்சர்' எந்த நிறுவனம் தெரியுமா?
பிசிசிஐ டிரீம் 11 உடனான ஸ்பான்சர் ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளது. இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் குறித்து பார்ப்போம்.

BCCI Ditches Dream11, Indian Cricket Team Gets New Jersey Sponsor
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. டிரீம் 11 உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இதை இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
டிரீம் 11 ஒப்பந்தத்தை முடித்த பிசிசிஐ
டிரீம் 11 நிறுவனத்தின் ஹேமங் அமின் பிசிசிஐ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பிசிசிஐ ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா தெரிவித்துள்ளார். இதனால், அடுத்த மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்பான்சர் இல்லாமல் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் யார்?
டொயோட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. 2026 வரை டிரீம் 11 உடன் ஒப்பந்தம் இருந்தபோதிலும், அரசின் சட்டத்திருத்தம் காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், பிசிசிஐக்கு இழப்பீடு எதுவும் வழங்கத் தேவையில்லை.
18 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிரீம் 11 நிறுவனத்தின் மதிப்பு 8 பில்லியன் டாலர்கள். பைஜூஸ் நிறுவனத்தின் நிதி மோசடி காரணமாக, 2023 ஜூலையில் டிரீம் 11 நிறுவனம் இந்திய அணியின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு 358 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் என்றால் என்ன?
இந்திய அணி மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் டிரீம் 11 முக்கிய பங்கு வகித்தது. ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல இந்திய வீரர்கள் டிரீம் 11 நிறுவனத்தின் விளம்பரத் தூதர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வந்துள்லது. இந்த சட்டம் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் கேம்களுக்கும் தடை விதிக்கிறது.
இதையும் மீறி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ட்ரீம் லெவனும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் என்பதால் பிசிசிஐ அந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷிப் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.