#AUSvsIND டெஸ்ட்: மேட்ச்சுக்கு முன்னாடியே அடுத்தடுத்து காலியாகும் ஆஸி., விக்கெட்டுகள்.! மற்றுமொரு வீரர் விலகல்
First Published Dec 14, 2020, 5:12 PM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஃபாஸ்ட் பவுலர் சீன் அபாட் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. 2வது டெஸ்ட் மெல்போர்னிலும், 3வது டெஸ்ட் சிட்னியிலும், 4வது டெஸ்ட் பிரிஸ்பேனிலும் நடக்கவுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இல்லை. இளம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான வில் புகோவ்ஸ்கி, பயிற்சி ஆட்டத்தில் கார்த்திக் தியாகியின் பவுலிங்கில் தலையில் அடிபட்டதால், கன்கஷனில் இருப்பதால் அவரும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?