மத்தவய்ங்கள மாதிரிதாங்க கோலியும்.. எனக்குலாம் அவரு ஒரு பொருட்டே இல்ல..! டிம் பெய்ன் மண்டை பேச்சு

First Published 15, Nov 2020, 4:43 PM

விராட் கோலியை வெறுப்பதற்கு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பிடிக்கும் என ஆஸி., டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 2018-2019 சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் ஆடுவதால் கோலி மற்றும் ஸ்மித் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த முறை இந்திய அணியின் கேப்டனும் தலைசிறந்த வீரருமான விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடவுள்ளார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார்.

கோலி ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம். கோலி ஆடாதது டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி பெரிய வீரரெல்லாம் இல்லை. மற்றவர்களை போலத்தான் எங்களுக்கு அவரும் என்று ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டிம் பெய்ன், விராட் கோலியை பற்றி நிறைய கேள்வி கேட்கிறார்கள். அவர் எங்களுக்கு மற்ற வீரர்களை போலத்தான். அவரைப்பற்றி எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அவரை டாஸ் போடும்போது பார்ப்பேன்; பின்னர் அவருக்கு எதிராக ஆடுவேன். இதைத்தவிர அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை.

விராட் கோலியை வெறுக்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேவேளையில், அவரது பேட்டிங்கை ஏராளமான ரசிகர்களில் ஒருவராக பார்க்க பிடிக்கும். ஆனால் அவர் அதிக ரன்கள் அடிப்பதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. கோலி கடுமையான போட்டியாளர்; நானும் அப்படித்தான். அதனால் சில நேரங்களில் வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. அந்த வாக்குவாதங்கள் நாங்கள் இருவரும் கேப்டன்கள் என்பதால் நடந்தவையல்ல என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.