#AUSvsIND மேத்யூ வேட், மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்; ஆனாலும் ஆஸி.,யை சுருட்டிய இந்திய அணி..! அடிக்கக்கூடிய இலக்கு

First Published Dec 8, 2020, 3:40 PM IST

கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 186 ரன்களை குவித்து 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேடும் கேப்டன் ஃபின்ச்சும் களமிறங்கினர். வேட் முதல் ஓவரிலேயே அதிரடியை தொடங்க, 2வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், ஃபின்ச்சை டக் அவுட்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த ஸ்மித், பந்துக்கு நிகரான ரன் அடித்து(23 பந்தில் 24 ரன்கள்) வாஷிங்டன் சுந்தரின் பவுலிங்கில் நடையை கட்டினார்.

அதன்பின்னர் மேத்யூ வேடுடன் ஜோடி சேர்ந்தார் மேக்ஸ்வெல். அடித்து ஆடி மேத்யூ வேட் அரைசதம் அடிக்க, மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். வேட், மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே அடித்து ஆட, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்லும் அரைசதம் அடிக்க, 19வது ஓவரில் மேத்யூ வேட் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 53 பந்தில் 80 ரன்கள் அடித்திருந்த வேடை ஷர்துல் தாகூர் அவுட்டாக்கினார். கடைசி ஓவரை வீசிய நடராஜன், 36 பந்தில் 54 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல்லை வீழ்த்தி, டெத் ஓவரில் அவரது அதிரடிக்கு இடம் கொடுக்காமல் ரன்னை கட்டுப்படுத்தினார். கடைசி ஓவரில் களத்திற்கு வந்து ஒரு சிக்ஸர் அடித்த ஷார்ட் 7 ரன்களுக்கு ரன் அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய, புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன், கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து, 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?