Fastest T20 Century: வான வேடிக்கை காட்டிய ஜோஷ் இங்கிலிஷ் – 7 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட சதம் அடித்து சாதனை!
Josh Inglis Fastest T20 Century: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஜோஷ் இங்கிலிஸ் அடித்த அற்புதமான சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றியை ருசித்தது.
Josh Inglis Fastest T20 Century
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், எடின்பர்க்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் அற்புதமான சதத்தை விளாசினார். சர்வதேச டி20 போட்டிகளில் இது அவரது இரண்டாவது சதமாகும். டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆஸ்திரேலிய வீரரின் அதிவேக சதம் இதுவாகும்.
ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ஜோஷ் இங்கிலிஸ் 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். 103 ரன்கள் எடுத்த அவரது சதம், ஆஸ்திரேலியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.
josh inglish
197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், அதன் பிறகு, அவர்கள் பின்தங்கி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தனர்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஸ்காட்லாந்து கேப்டன் ரிச்சி பெரிங்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Josh Inglis
முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸ்திரேலிய நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்த போட்டியில் பெரிய இன்னிங்ஸை ஆட முடியவில்லை. மிக விரைவிலேயே ஆட்டமிழந்தார்.
முந்தைய போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த டேவிட் வார்னர் இந்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு மற்றொரு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Fastest T20 Century
அதன்பிறகு ஜோஷ் இங்கிலிஸ்-கேமரூன் கிரீன் ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அளித்தது. ஒரு முனையில் கேமரூன் கிரீன் நிதானமாக ஆட, மறுமுனையில் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் மும்முரமாக இருந்தார்.
ஜோஷ் இங்கிலிஸ் ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என விளாசி 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அதன்பிறகு ஜோஷ் இங்கிலிஸ் தனது பேட்டிங் கியரை மாற்றினார்.
T20 Cricket
தனது அதிரடியை அதிகப்படுத்தி பவுண்டரிகள் மழை பொழிந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் வருவதற்கு முன்பு, கேமரூன் கிரீன் 29 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஜோஷ் இங்கிலிஸ் 43 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதத்தை அடித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜோஷ் இங்கிலிஸுக்கு இது இரண்டாவது சதமாகும்.
ஜோஷ் இங்கிலிஸ் 103 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இந்த சதத்தை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஜோஷ் இங்கிலிஸ் பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 47 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
SCO vs AUS, Josh Inglis
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் ஏற்கனவே 47 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதற்கிடையில், இதுவரை ஜோஷ் இங்கிலிஸை இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி வரும் அவர், வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரராக மாற வாய்ப்புள்ளது.