- Home
- Sports
- Sports Cricket
- Asia Cup: கேவலமான செயல்! 2 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பு கன்பார்ம்! ஐசிசியிடம் பிசிசிஐ புகார்!
Asia Cup: கேவலமான செயல்! 2 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பு கன்பார்ம்! ஐசிசியிடம் பிசிசிஐ புகார்!
Asia Cup 2025: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் செய்த கேவலமான செயல் குறித்து ஐசிசியிடம் பிசிசிசிஐ புகார் அளித்துள்ளது. அந்த 2 வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில், ஆசிய கோப்பையின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோர் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. களத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை வரம்புகளை மீறியதாகக் கருதும் இரு வீரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய அணி கோரிக்கை விடுத்துள்ளது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ர்சைக்குரிய கொண்டாட்டம்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், அரை சதம் அடித்த மகிழ்ச்சியில் துப்பாக்கி போல பேட்டைப் பிடித்து சர்ச்சைக்குரிய வகையில் கொண்டாடினார். இந்த செயல் உணர்வற்ற மற்றும் ஆத்திரமூட்டும் செயல் என பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தான் பீல்டிங்கின்போது அந்த அணி வீரர் ஹாரிஸ் ராஃப்பின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹாரிஸ் ராஃப்பின் கேவலமான செயல்
அதாவது ஹாரிஸ் ராஃப், பவுண்டரி லைனின் இருந்தபோது, டி20 உலகக்கோப்பையில் அவர் பந்தை விராட் கோலி சிக்சர் அடித்ததை அவருக்கு நினைவூட்டும் வகையில் ரசிகர்கள் கோலி, கோலி என்று கூச்சலிட்டனர். இதனால் எரிச்சல் அடைந்த ஹாரிஸ் ராஃப், தனது விரல்களை உயர்த்தி "0-6" என்று குறிப்பிட்டார்.
இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது 6 இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானின் ஆதாரமற்ற கூற்றுக்களைக் குறிப்பதாகும்.
முதலில் ஜெயிச்சிட்டு வாய் பேசுங்க..
இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட 31 வயதான ஹாரிஸ் ராஃப்க்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. ''முதலில் களத்தில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்த பாருங்கள். திறமையில்லாதவன் தான் எதையாவது கிறுக்குத்தனமாக சொல்லிக் கொண்டே இருப்பான்'' என்று இந்திய ரசிகரக்ள் கிண்டலடித்தனர். இப்படியாக சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகியோரின் கேவலமான செயல் குறித்து தான் ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது.
பாகிஸ்தானியர்கள் புலம்பல்
பாகிஸ்தான் வீரர்கள் குறித்து பிசிசிஐ புகார் அளித்ததற்கு பாகிஸ்தானியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''இந்திய அணி வீரர்கள் விளையாட்டின் நன்னடத்தையை மதிக்காமல் எங்கள் அணி வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் மீது மட்டும் புகார் கொடுப்பது எந்த வகையில் நியாயம்'' என புலம்பித் தவித்து வருகின்றனர்.