#AUSvsIND டெஸ்ட்: மயன்க் அகர்வாலுடன் அவரை ஓபனிங்கில் இறக்குங்க..! அணியின் பலவீனமே பலமா மாறிடும்
First Published Dec 13, 2020, 6:24 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக யாரை இறக்க வேண்டும் என்ற பெரும் விவாதம் நடந்துவரும் நிலையில், தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. 2வது டெஸ்ட் மெல்போர்னிலும், 3வது டெஸ்ட் சிட்னியிலும், கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனிலும் நடக்கவுள்ளன.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி எது என்பது கேள்வியாக உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, கேஎல் ராகுல், ஷுப்மன் கில் ஆகியோர் இருப்பதால், தொடக்க ஜோடி எது என்பது பெரிய கேள்வி. மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. அவருடன் இறங்கப்போவது யார் என்பதுதான் பெரும் விவாதப்பொருளாக உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்த தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?