MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!

Ajit Agarkar: ரோகித் சர்மாவுடன் மோதல்?.. இனி இந்த பதவி வேண்டாம்.. அஜித் அகர்கர் முடிவின் பின்னணி!

Ajit Agarkar: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலக உள்ளார். ரோகித் சர்மாவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 24 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பதவியில் தொடர விருப்பமில்லை
Image Credit : ANI

பதவியில் தொடர விருப்பமில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலகுவது உறுதியாகிவிட்டது. தனது மூன்றாண்டு ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்தப் பதவியில் தொடர தனக்கு விருப்பமில்லை அகர்கர் என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். அக்டோபர் 4ஆம் தேதியுடன் அகர்கரின் பதவிக்காலம் முடிகிறது. இதன் பிறகுதான் புதிய தேர்வுக்குழு தலைவரின் பெயரை அறிவிப்போம் என பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற அகர்கர்
Image Credit : Asianet News

ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற அகர்கர்

தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற முடிவை செப்டம்பர் 18ஆம் தேதியே பிசிசிஐ-யிடம் அகர்கர் சொல்லிவிட்டார். இதன்பிறகு, தேர்வுக்குழுவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு பிசிசிஐ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அளித்த பேட்டியில், புதிய தலைவரைத் தேடும் விஷயத்தில் அவசரம் காட்டத் தேவையில்லை என்றும், தங்களுக்குப் போதுமான நேரம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 4ஆம் தேதி வரை அகர்கர் தனது பதவியில் நீடிப்பார். அதன்பிறகு காலியாகும் இடத்திற்குப் புதியவரைத் தேட பிசிசிஐக்கு நிறைய நேரம் கிடைக்கும். சைகியா, இறுதி முடிவு எடுத்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

34
அகர்கர் தலைமையில் 3 ஐசிசி கோப்பை
Image Credit : ANI

அகர்கர் தலைமையில் 3 ஐசிசி கோப்பை

அஜித் அகர்கர் 2023 ஜூலையில் சேத்தன் சர்மாவுக்குப் பதிலாக முதன்மை தேர்வுக்குழு தலைவராகப் பொறுப்பேற்றார். இந்திய அணி, அகர்கர் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்றது. புதிய தேர்வுக்குழு தலைவரின் முன் உள்ள மிகப்பெரிய சவால், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்காக ஒரு வலுவான அணியை உருவாக்குவதுதான். பிசிசிஐ, இந்தத் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேலின் பெயரைப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

44
ரோகித் சர்மா-அகர்கர் இடையே மோதல்
Image Credit : Getty

ரோகித் சர்மா-அகர்கர் இடையே மோதல்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாகவே, சீனியர் வீரர் ரோகித் சர்மாவுக்கும் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையே பனிப்போர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அஜித் அகர்கர், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக ரோகித் சர்மாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ரோகித் சர்மா, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைத்தார். மேலும், பிசிசிஐ செயலாளர் வெளிப்படையாகவே ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அஜித் அகர்கருக்கும் பிசிசிஐக்கும் இடையே மனக்கசப்பு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
ரோகித் சர்மா
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(70.4 ov) 99 & 202/4
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(19.0 ov)218/6
IND 8 runs in 6 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?
Recommended image2
Sanju Samson Watch Jailer 2: ஜெயிலர் 2 படம் பார்க்க 2 தியேட்டர்களை ஒட்டுமொத்தமா புக் பண்ணிய சஞ்சு சாம்சன்!
Recommended image3
விவாகரத்து, குடிக்கு அடிமை, பேனிக் அட்டாக்.. மீண்டு வந்த யுஸ்வேந்திர சாஹலின் கண்ணீர் கதை!
Related Stories
Recommended image1
Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!
Recommended image2
Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved