டெல்லியால் தலைகீழாக மாறிய புள்ளிப்பட்டியலில் – பரிதாப நிலையில் ஆர்சிபி!
லக்னோவிற்கு எதிராக நேற்று நடந்த 26ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளது.
Delhi Capitals
இந்த நிலையில் தான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலிருந்து சரிந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Lucknow Super Giants
லக்னோவின் ஹோம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது. இதில், ஆயுஷ் பதோனி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match, IPL Points Table
பின்னர் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 32 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு வந்த அறிமுக வீரர் ஜாக் ஃபிரேஸர் மெக்கர்க், கேப்டன் ரிஷப் பண்ட் உடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரு அறிமுக வீரராக தனது முதல் போட்டியில் அரைசதம் அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் மெக்கர்க் இடம் பெற்றார்.
LSG vs DC, IPL 2024
மேலும், ஐபிஎல் அறிமுக வீரராக களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர்களின் பட்டியில் 2ஆவது வீரராக இடம் பெற்றார். அதோடு, மூன்றாவதாக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியில் 2ஆவது வீரராக இடம் பெற்றார். கடைசியாக மெக்கர்க் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Lucknow Super Giants vs Delhi Capitals
ரிஷப் பண்ட் 41 ரன்களில் வெளியேற, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசியில் டெல்லி கேபிடல்ஸ் 18.1 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th Match IPL 2024
இந்த வெற்றியின் மூலமாக லக்னோ அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 4ஆவது போட்டியில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
Lucknow Super Giants vs Delhi Capitals, 26th IPL Match
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், ஆர்சிபி 9ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதே போன்று லக்னோ தோல்வி அடைந்த நிலையில் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதோடு, ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 4ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.