MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆர்சிபி விற்பனையில் திடீர் ட்விஸ்ட்.. திடீரென களத்தில் குதித்த இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்!

ஆர்சிபி விற்பனையில் திடீர் ட்விஸ்ட்.. திடீரென களத்தில் குதித்த இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்!

ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளரான டியாஜியோ, இந்த விற்பனை மூலம் சுமார் 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கிறது. மூன்றாவது போட்டியாளர் களத்தில் இருப்பதால், இது ஒரு சாதனை விலைக்கு விற்கப்படலாம். 

1 Min read
Author : Rayar r
Published : Mar 22 2026, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா
Image Credit : Getty

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. இதேபோல் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும் தீவிரமாக தயாராகி இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

24
ஆர்சிபி அணி விற்பனை
Image Credit : Getty

ஆர்சிபி அணி விற்பனை

இந்நிலையில், அணியின் விற்பனை தொடர்பான ஏலத்தில் சில முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆர்சிபி அணியை வாங்க முதலில் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால், மதிப்பு அதிகமாக இருந்ததால் சில நிறுவனங்கள் பின்வாங்கின. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில், தற்போது ஆதித்யா பிர்லா குரூப் இந்த ரேஸில் நுழைந்துள்ளது.

Related Articles

Related image1
IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
Related image2
ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பெங்களூரு சின்னசாமியில் ரன் மழைக்கு ரெடியா? குட் நியூஸ்!
34
களத்தில் குதித்த ஆதித்யா பிர்லா குரூப்
Image Credit : X

களத்தில் குதித்த ஆதித்யா பிர்லா குரூப்

ஆதித்யா பிர்லா குரூப், அமெரிக்காவின் பிரபல விளையாட்டு முதலீட்டு நிறுவனரான டேவிட் பிளிட்சருடன் இணைந்து ஏலத்தில் குதித்துள்ளது. இவர்கள் ஆர்சிபி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு அணிகளையும் வாங்க ஏலம் கோரியுள்ளனர். இதனால் போட்டி மேலும் வலுத்துள்ளது. 

தற்போது ஆர்சிபி அணியை வாங்க மூன்று முக்கிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. மணிபால் குழுமத்தின் ரஞ்சன் பாய் மற்றும் அசிம் பிரேம்ஜியின் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக ஏலம் கேட்டிருந்தன. இப்போது ஆதித்யா பிர்லா - டேவிட் பிளிட்சர் கூட்டணியும் இணைந்துள்ளது.

44
2 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகுமா?
Image Credit : RCB-X Handle

2 பில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகுமா?

ஆர்சிபி அணியின் தற்போதைய உரிமையாளரான டியாஜியோ, இந்த விற்பனை மூலம் சுமார் 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கிறது. மூன்றாவது போட்டியாளர் களத்தில் இருப்பதால், இது ஒரு சாதனை விலைக்கு விற்கப்படலாம். டியாஜியோ குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்களை எதிர்பார்க்கிறது. 

ஆதித்யா பிர்லா குரூப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுக்கும் ஏலம் கோரியுள்ளது. ஆனால், பிசிசிஐ விதிகளின்படி, ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு அணிகளில் பங்கு வைத்திருக்க முடியாது. ஒருவேளை இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
World Cup 2027: IPL-ல் சொதப்பினா டீம்ல இடமில்லை..! வாழ்வா, சாவா நிலையில் 20 வீரர்கள்..
Recommended image2
ஐபிஎல் தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்? ஜியோஸ்டாரில் இலவசமா?
Recommended image3
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Related Stories
Recommended image1
IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?
Recommended image2
ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பெங்களூரு சின்னசாமியில் ரன் மழைக்கு ரெடியா? குட் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved