- Home
- Sports
- Sports Cricket
- Abhishek Sharma: 32 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா! அதிக சிக்சர்கள் விளாசி சாதனை!
Abhishek Sharma: 32 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா! அதிக சிக்சர்கள் விளாசி சாதனை!
Abishek Sharma 32 ball hundred in SMAT: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

32 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். பஞ்சாப் கேப்டனான அபிஷேக் சர்மா வங்காளத்திற்கு எதிராக 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார்.
அவரது இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். அபிஷேக்கின் அதிரடி பேட்டிங்கால், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.
சிக்சர் மழை
பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், முகமது ஷமி தனது நான்கு ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கினார். 12 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக், முகமது ஷமியின் ஒரே ஓவரில் 23 ரன்கள் எடுத்தார்.
அபிஷேக்கின் முதல் 51 ரன்களில் 50 ரன்கள் பவுண்டரிகள் மூலமே வந்தன. அப்போது அவர் தலா ஐந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை அடித்திருந்தார். 32 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் சதத்தை நிறைவு செய்தார்.
அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்
வெறும் 157 இன்னிங்ஸ்களில் தனது எட்டாவது டி20 சதத்தை அவர் பதிவு செய்தார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். டி20 வடிவத்தில் அதிக சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி (9) மட்டுமே அபிஷேக்கிற்கு முன்னிலையில் உள்ளார். கடந்த ஆண்டு மேகாலயாவுக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் அபிஷேக் சதம் அடித்திருந்தார்.
கடந்த ஆண்டு அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து அபிஷேக் 87 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இந்த ஆண்டு அது 91 ஆக உயர்ந்துள்ளது. ஒரு காலண்டர் ஆண்டில் இந்த வடிவத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் பெற்றார்.
ஓராண்டில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்
அபிஷேக் சர்மா (2025) 91 சிக்சர்கள் (33 இன்னிங்ஸ்)
அபிஷேக் சர்மா (2024) 87 சிக்சர்கள் (38 இன்னிங்ஸ்)
சூர்யகுமார் யாதவ் (2022) 85 சிக்சர்கள் (41 இன்னிங்ஸ் )
சூர்யகுமார் யாதவ் (2023) 71 சிக்சர்கள் (33 இன்னிங்ஸ்)
ரிஷப் பண்ட் (2018) 66 சிக்சர்கள் (31 இன்னிங்ஸ்)
ஷ்ரேயாஸ் ஐயர் (2019) 63 சிக்சர்கள் (42 இன்னிங்ஸ்)
சஞ்சு சாம்சன் (2024) 60 சிக்சர்கள் (32 இன்னிங்ஸ்)

