பத்தாண்டின் சிறந்த டி20 லெவன்: ரோஹித், கோலி, பொல்லார்டு இருக்கும் அணியில் கேப்டன் வேற வீரர்
First Published Dec 14, 2020, 8:32 PM IST
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டி20 லெவனை பார்ப்போம்.

கடந்த பத்தாண்டில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி கோலோச்சிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. தனது பார்வையில் பத்தாண்டின் சிறந்த டி20 லெவன் வீரர்கள் யார் என்பதை தனது யூடியூப் சேனலில் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஆஸி., கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 3ம் வரிசை வீரராக கோலியையும், 4ம் வரிசை வீரராக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனையும், விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஃபினிஷர்களாக பொல்லார்டு மற்றும் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக ரஷீத் கானையும், ஃபாஸ்ட் பவுலர்களாக மலிங்கா, பும்ரா, ஸ்டார்க் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?